Mittwoch, 2. April 2014

அவளும் அரசியலும், பின் நானும் கட்டிலும்

அவளும் அரசியலும், பின் நானும் கட்டிலும்



(புனைவு.)



து கோடைகாலம்.நேற்று அவளோடு கண்ட கலகத்தில் உருக்குலைந்து படுக்கையில் புரண்டபோது,



சில ஞாபகங்கள் நெஞ்சை முட்டுகின்றன.



அக்கம் பக்கம் பார்த்துப் பேசு தம்பி எண்டு என்ர அம்மா அடிக்கடி சொல்லும்.



அப்படிப்பட்ட தமிழ்ச் சமூகத்துள் வாழக் கொடுத்த உடல்களுக்கு- எல்லோருக்கும் ஒரு பெயர் இருப்பதுபோல எனது உடலுக்குச் சிறியபாலன் பொருத்தமாக இருக்குமெண்டு என்ர தாத்தா சொன்னவராம்.அதனால தாத்தாவின் அச்சொட்டான பக்திமார்க்கத்தில் மரியாளின் கையில் தவழ்ந்துவரும் சிறியபாலனை என்னில் கண்டபோது நான் தாத்தாவைத் தின்பதற்காக வந்தவன் எண்டு எங்கட பாட்டி சொல்லிச் சொல்லி அழுதுவடிந்தாவாம் பின்னாளில்.



இப்படியொரு நினைவைக் காவி வந்த இந்தக் கோடைகாலத்தில் இன்னுஞ் சில நினைவுகளும் கூட வந்தபடியிருந்தன.அவை பெரும்பாலும் உடல் கண்டு உருகும், மனமுருக்கி நோயின் அறிகுறியோடு அடைப்பகற்றி வடிந்தொழுகும் "அந்த இந்தா"பூச்சி பார்க்கும் ஒரு பருவத்தின் பக்குவமற்ற பொழுதுகள்.இப்படிக் கூடவே வந்து தொலைகின்றன.



எனினும் இது கோடைகாலம்தானே?



அப்ப!



அப்ப என்ன அப்ப?



இப்ப மாதிரியல்லவா இருக்கு!-அந்த அப்ப.




இனிப்புக்கு ஒருக்காய் பிடி.




எள்ளுருண்டைக்கு ஒருக்காய் பிடி.




பேரீச்சம் பழத்துக்கு ஒருக்கா கொஞ்சவிடு.



பார்லிச் சோடாவுக்கு ஒருக்காய் ஆட்டு.



இப்படிச் சில்லறைத்தனமாகப் இலுப்பைக்கூடல் சந்தி கடைக்காரன்-மாமா முறை வேணும், என்னிடம் இனிப்புகள் தந்து தன்னைத் தணித்தபோது எனக்குப் பத்து வயது.மாமாவுக்கு தொடையுக்க கட்டி கண்டு சிதள் பிடித்துவிட்டது!இறுக்கி ஆட்டிவிடு குஞ்சு.சிதள் வெளியில வர.நானும் சிதள் எடுத்துவிட்ட காலத்தை அப்போவெல்லாம் நினைத்தே பார்ப்பதில்லை.அதுவொரு அவஸ்த்தையான காலம்.மனதில் பெரிய பெரிய கனவெல்லாம் வரும்.அம்புலிமாமாப் புத்தகத்தில வருகிறமாதிரிப் பெரிய உருவ மனிதர்கள் கனவினில் வருவதுண்டு.சின்ன வயதில் எனக்கு அம்புலிமாமாப் புத்தகம்தாம் பிடிக்கும்.பாடப் புத்தகத்தைவிட இது அழகாக இருக்கும்.நல்ல கற்பனைகளைத் தந்து கொண்டிருந்தது.அல்லது நான் மாமாவுக்குச் சிதள் எடுத்துவிட்டதை மறக்க முனைந்தேன், அதுள்.







"அக்கம் பக்கம் பார்த்துப் பேசு தம்பி"எண்டது என்னெண்டு இப்பவும் விளங்கவில்லை.அதனால இந்த வகையறாக்களையும் சொல்வதில் கூச்சம் இருப்பதாகக்கூடத் தெரியவில்லை.



கோடை வெயிற்காலமென்பதால் அப்பப்ப பியருக்கு பியர் குடலை நிறைப்பதில் ஏவறை முன்னுக்கு வந்து தொந்தரவு தந்து கொண்டிருக்கு.எல்லாம் அவள் போட்ட அல்லது நான் போட்ட தர்க்கத்தால் வந்த வினைதாம்.



அடிவயிற்றில் கிடப்பதைக்கூடக் கண்டறிந்தால் அதை வெளியில கொட்டுவது எனக்குப் பிரச்சனையாக இருப்பதில்லை.என்னத்தையோ பறி கொடுத்தமாதிரிச் சிலர் பேயடித்ததுபோல இருப்பது எனக்குப் பிடிப்பதில்லை,அல்லது சோகத்தனமான பாடல்களைக் கேட்பதும் எனக்குப் பிடிக்காது.எப்பவுமே துள்ளல் இசைதாம்.அதுவும் பெண்ணுடலைச் சுத்தியே பாடல் கட்டினால் அதைப் பல மணி நேரம் கேட்டபடி இலயிப்பேன்.



இப்படியொரு நினைவோடு கண்சிமிட்டிக் கொண்டிருந்த மனதுக்கு என்னவோ அவளால் நடந்துவிட்டது.




மனதுக்குள் ஒருவித ஏமாற்றம் நிலவியது.அப்படி என்னதாம் இருக்குமென்று அறிவுக்குப் புலப்படவில்லை.




சிறியபாலனின் சிறு பிராயத்துக்குள் கிடக்கும் "மாமாவின் கடை" ஞபாகமாக இருக்குமாவெண்டு பார்த்தால் அது நிச்சியமாக இருக்காது.ஊரைப் பார்த்தாக வேண்டுமென்றால் அதுவும் மனதுக்கு ஏமாற்றம்தான்.எங்கோவோ வெளி நாட்டிலிருந்து மட்டக்களப்புக்கு மனைவி பிள்ளையளப் பார்க்கப்போன ஜாணுக்கு என்ன நடந்தது?அதுதாம் மனதினது ஏமாற்றத்துக்குக் காரணமோ?அவளோடு இதைத்தானே விவாதித்துப் பிரிந்தோம்!...ச்சீ...அவளை மிஸ் பண்ணி...



எண்டாலும்...மண்டையில போட்டாங்களே! ஒரே குழப்பமாகக்கிடக்கு.இவங்கள் நித்திரைபோலக் கிடப்பாங்கள்,ஆனால் நசுக்கிடாமல் எல்லாத்தையும் மோப்பம் பிடித்தபடி...




மனிதர்களைக் கொல்லுவதில் விடுதலை வந்துவிடுமெண்டு எந்தப் புராணத்தில் இருக்கு?




எதெண்டாலும் நம்மட நாட்டைப் பார்க்காதிருக்க முடியுமோ?



நல்லதோ கெட்டதோ அதுதானே எங்கட மனதுக்குள் தொங்கிக்கிடக்கும் அழகான சிறுபிராயம்.



என்னதான் மாமாவுக்குச் சிதளெடுத்த காலம் மங்கலாகத் தலைகாட்டினாலும்,மாதா கோயில் குருசு மரமும்,கொடி மரமும் மறக்கமுடியாதவொரு நினைவுச் சின்னங்களாகக்கிடக்கு.இருந்திருந்து எட்டு மூலைப் பட்டத்தின்ர உச்சப் பறப்பிலும்,விண்கூவலிலும் ஒரு மனத்துடிப்பு-மகிழ்வு இருப்பதும் இப்போது ஏமாற்றத்தைத் தந்தபடிதாம்.ஜாணுக்கும் இப்பிடித்தாம் இருந்திருக்கும்...




ஆனால் மனதினது சோகத்துக்கு வேறொரு காரணமும் இருக்கும்போல.அவள்தாம்!அவள்மீதான வாக்குவாதமும்,அவளை அவள் சுயமே புதைத்துக் கொண்டிருப்பதால் எதைச் சொன்னாலும் நாலுகால் பாய்ச்சலில் எம்பிக் குதிக்கிறாள்!யாரூ என்ன சொன்னாலும் அதை நேரடியாக விளங்குவதில் ரொம்பக் கெட்டிக்காரி.இவளை நினைத்தபோது இந்தக் கோடைகால இதமான கால நிலைகூடப் பனிக்காலக் கொடுமையாகி விடுகிறது.



நேற்றுக்கூட இந்த நண்பிக்கு மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஜாண் பற்றிய என் கருத்தாடலில் மனது புண்ணாகிவிட்டதுபோல ஒரு மனக் கிலேசம் பிடித்திருந்தது.



அரசியல் மாற்றுக் கருத்துக்களுக்காக ஒருவரை மண்டையில் போடும் அரசியல் எப்படி ஜனநாயத் தன்மையானது எண்டதுதாம் எனது கேள்வி.அவளுக்கு ஜனநாயகமென்பது தமிழர்களுக்காகப் போரடுவதுதாம் எண்ட கதையாகவும்,அதற்கு எதிராகக் கருத்துச் சொல்வது சரியில்லை எண்டமாதிரி.




"ஏனப்பா உமக்கு ஒவ்வொரு நாளும் சாகிற சனமெல்லாம் துரோகியெண்ட நினைப்போ?"இப்படி அவளைப் புடுங்கியெடுத்தேன்.



"நீர் சொல்லுறது சரியில்லை.பாலா அண்ணா இந்தியப் பிரதமர் இராஜீவ் கொலையைத் தவறென்று சொல்லுறார்.தங்களை மன்னிக்க வேறு சொல்லுறார்.அவர்கள் ஜனநாயகத்தை இப்ப மதிக்கினம்."அவள் விழிகளில் நம்பிக்கையைவிட ஒருவித எதிர்பார்ப்பே இருந்தது.




"ம்ம்ம்ம்........ அவர்கள், தாங்கள் இராஜீவைக் கொல்லவே இல்லை எண்டு இதுவரை சொன்னவர்கள்.இப்ப பாலா அண்ணா ஒத்துக் கொண்டு அப்புறுவர் ஆகிறாரே!அதோட இது ஜனநாயமெண்டுற போதுதானே குண்டு வெடிப்பும்,ஜாண் கொலையும் நடக்குது..."நான் இழுத்துக் கொண்டு போனபோது அவளுக்கு மேலும் விவாதிக்கவிருப்பமில்லை.




"தேசியத்துக் எதிரான கருத்துக்கள் எங்கட விடுதலைக்கு உதவாது"எண்டாள்.




"அதென்ன தேசியம்,விடுதலை? கொஞ்சம் சொல்லேன்!"எனக்கு அவள் குறித்து நிறைய மதிப்புண்டு.எனினும் அவள் அதைத் தப்பாகவே எடுத்துக் கொண்டு,தன்மீது காதலென்றும்,கல்யாணத்துக்குப் பின்புதாம் எல்லாம் என்பாள்.நானோ "நல்லதொரு நட்போடு பின் கூடுதலும் குலைதலுமே நோக்கு" என்ற பேர்வழி.அவள் மிக இளமையானவள்,என்னைப் போலவே.எமெக்கென்ன முப்பதைக்கடக்காத வயதில் என்ன கல்யாணம் வேண்டிக்கிடக்கு? அம்மா அப்பா பார்த்துச் செய்கிறபோது அது நடக்கட்டும்.எண்டமாதிரித்தாம் எனது நோக்கு.




"உமக்கு என்னைக் கிண்டலடிப்பதே தொழிலாச்சு!இனியும் உம்மோட கதைச்சால் என்னை முட்டாளாக்கிப் போடுவீர்"எண்டபடி வெடுக்கெனப் பாய்ந்தாள்.நல்லதொரு பொழுதில் அவளை இழக்கவிரும்பவில்லை.நாங்கள் மதிய நேர உணவை ஒரு சைனா ரெஸ்ரோரன்டில் உண்பதாகத் திட்டமிட்டே கூடியிருந்தோம்.எல்லாம் நாசமாய்ப் போச்சு.அரசியல் கதைத்து முகத்தைத் தொலைத்துப் பிரிந்தோம்.அந்தப் பொழுது வீணாகப் போனது,அவளைப் போலவே.




எதெண்டாலும் அவாவுக்கு இப்படிச் சரியான அவசரம்கூடாது.
எதற்கெடுத்தாலும் இந்தா தோளில சுமக்கிறன் எண்டபடி எல்லாவற்றையும் தன்னைச் சுற்றியே பின்னப்பட்டதாக அவள் எண்ணி விடுகிறாள்.நானும் என்பாட்டுக்கு அவளை நல்லாபடியாகச் சபித்திருக்கிறேன்,"ஏன் நீர் இப்படி அவசரக் குடுக்கைமாதிரி அலம்பித் தள்ளுகிறீர்?"சில சமயங்களில் எங்கட சம்பாஷணைகள் இப்படித்தாம் ஆரம்பமாகும்.அவள் சுயமுனைப்புடையவள் எண்டு நான் எண்ணுவதாலும்,அவள் பற்றிய எனது கணிப்பு -எனக்குப்பிடித்த பிறேமொன்றைச் செய்து அவளை அதற்குள் திணித்தேன்.இந்தத் திணிப்போடு அவள் வருகிறபோதெல்லாம் நான் ரொம்ப நம்பகத் தன்மையற்றபடியேதாம் கதைத்து வந்துள்ளேன்.



இந்தக் கட்டிலை விட்டெழும்பும் தெம்பு எனக்கில்லை.



அவள் குறித்த கனவுகளோடு ஏமாற்றம் நெஞ்சுக்குள் புகைகிறது!



அம்மா தேத்தண்ணியோடு என்ர அறைக்கு வந்து என்னைப் பரிவோடு உச்சிமோந்து செல்கிறாள்.அவளுக்கு என்ர வயது பன்னிரெண்டு என்ற நினைப்பு.அப்பனுக்கோ எனக்கும் வயசாகிற பருவமும் விளங்கிறதில்லை.அடுத்த வருடம் முப்பதைக் கூட்டி வந்திரும்.தங்கச்சிக்கு மாப்பிளை பார்க்கிற அம்மாவுக்கு என்ர நினைப்பு வருகிறதே இல்லை.



அவள் வருவாளா?



அரசியல் பேசுவாளா?என்ர நோக்கை நான் அடைவேனா?



ஒண்டும் சரியில்லை.



அவளை வன்னிக்குக் கூட்டிக் கொண்டுபோய் நல்ல மழையில் இறுகப்பிடித்து நனைந்து புரண்டெழுவேண்டும்.நம்ம காரியம் முடிய அவளை அங்கேயே தொலைத்துவிட்டு நான்மட்டும் புகல் நாடு மீளவேண்டும்.ஆத்திரம் மனதைக் குடைகிறது.



"அக்கம் பக்கம் பார்த்துப் பேசு தம்பி" எண்டு என்ர அம்மா அடிக்கடி சொல்லுவா,எண்டாலும் அவளால் அக்கமும் தெரியவில்லைப் பக்கமும் தெரியுதில்லை.



அவள்...



ப.வி.ஸ்ரீரங்கன்

Dienstag, 6. Oktober 2009

குயிலும் கரும்பும் செழுந்தேனும்...

ஆவீன மழைபொழிய இல்லம் வீழ...

(சின்னக் கதை)
 
ஆவீன மழை பொழிய இல்லம் வீழ....

இங்கு எதுவும் ஈனவில்லை. கடும் மழையும் பொழியவில்லை. எனினும்
என் வீடு வீழ்ந்தது. சிதறுதேங்காய் போன்று சிதறியபடியே கற்கள்
உருண்டன.

கூடவே கோதாரி புடிச்ச உடம்பும் சிதறிப் பிய்ந்தது.
ஆவீன மழை பொழிய இல்லம் வீழ...
நாசியேவ குண்டு பொழிய இல்லம் வீழ மெய் சிதற
அகத்தடியாள் விம்மியழ வாரிசு வதங்கித் துவள....
இருப்பைக் காக்கத்தான் யாவும்.
 
ஈழத்தை விட்டு ஜேர்மனியில் வாழ்வதும் சாவதும் இருப்பைப் பற்றிய
கனவின் உந்துதலால்தாம்.
நீண்டு வளையும் உணர்வுகளுக்கு குறியீடு எதுவுமில்லை.
சிதறிய கற்களுக்குள் சின்னதாய் முனகல்.
 
மனைவி.
ஒலி.
எதிரொலி!
 
என் செவிப்பறை இரைச்சலில் வலுவிழந்தது.
பிரபஞ்ச இரைச்சல்.
ஒலியைத் தவிர வேறெதுவுமில்லை. அத்வைதம் மனதில் விரிந்தது.
ஒலியே அநாதி!
சற்றுமுன் வெடித்த குண்டின் ஒலி எனக்கு அநாதியாகவே பட்டது.
ஈழத்துப் பிரஜை என்ற உந்துதலோ என்னவோ!
 
அகத்தடியாள் மெய் நோக அடிமை சாக....
 
என் அகத்தடியாள் அழுதாள்.

மெய் நோக நோக விம்மி விம்மியழுதாள்.
அடிமை?

இவ் லோகத்தின் அடிமை??

தான் அடிமையென்று உணர்வதற்குள்ளேயே அடிமை செத்தது.
என் வீரியத்தின் மகுடம் துவண்டு கிடந்தது. மூச்சில்லை.
முகங்கற்குவியலுக்குள்.
நாடி நரம்புகள் வலுவிழக்க என்னால் அவனைப் பார்க்க
முடியவில்லை.
உச்சியிலிருந்து குருதி கசிந்தது.
 
அவன்மீது கட்டப்பட்ட கனவுகள் கோடி. தவிடுபொடி யாவும்.
என் மீது நான் கொள்ளும் பச்சாதாபம் அவனுருவில் வலிமை சேரும்.
எனக்காக எதிர்காலம் முற்றுப்புள்ளியாய் போனபோது, அவன் எனக்கு
ஆரம்பத் தொடரானான். இதற்குக் குண்டு முற்றுப்புள்ளி வடிவில்
வந்து சேர்ந்தது.
இயலாமை மீண்டும் உச்சியில் ஏறியமர்ந்து ஊனப்படுத்தியது
என்னை.
 
அவன் மனிதத்தை(சஞ்சிகை) இறுகப்பற்றியிருந்தான்.
குருதியினால் அiதைத் தூய்மைப்படுத்தவா...?
போன கிழமைதாம் அது தபாலில் வந்தது. சுவிசிலிருக்கும் சில தமிழ்
நண்பர்களின் முயற்சி அது.
மனிதம் மீது கவிந்த வெறுப்புத்தானே குண்டுகள் வடிவில்
குடிகளுக்குள் வருகின்றன?
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக்கொள்ள....
இருப்பதே வாடகைக்குடியில் இதற்குள் விளைவிப்பதற்கேது நிலம்?
 
ஒரு
நாளைக்கு உடம்புக்கு முடியாது போனால் வாடகைவீட்டு ஞாபகம்.
கிருஷ;ணனின் பிரமாண்ட காட்சியில் வாயில் விரியும் கோறையாக....,
அதற்குள் மானுடம் புழுவாக நெளியும் காட்சியாக விரியும்.
நேற்றும் வேலைக்குப் போனபோது என்னுடன் வேலைபார்க்கும் என்
நண்பன் ஞானத்தின் பெயரை நேர அட்டவணையில் இருந்து
நீக்கியிருந்தார்கள். போனமாதம் வேறொரு தொழிலாளியை வீட்டுக்கு
அனுப்பியபோது தட்டந்தனியனாக நின்று எதிர்த்தவன்.
டொச்சில்'Ausbeutung Systeme" (சுரண்டல் பொறிமுறை)
என்று கோசம் போட்டவன்.
நேற்று....
 
இன்று நான், என் குடும்பம் வெடிகுண்டுப் புகைக்குள் குருதி சிந்தி....
உயிர் கொடுத்து....
 
இடிபாடுகளுக்குள் இருந்து என்னால் எதுவும் செய்யமுடியவில்லை.
வேலைக்குப்போக முடியாமல் நேர்ந்ததையெண்ண அது பயமாகி என்
வீட்டு இழப்பைக்கூட மறக்கடிக்கிறது சில விநாடிகள்.
டொச்லாண்ட் புகைகளின் பின்னே...
எனக்கு ஈழம் இப்போ சிறப்பானதாகப்பட்டது.
யுத்தத்தை மறுத்து,
 
தூக்கம் வரும்போது தூங்கி, பசி வரும்போது
கொட்டாவி விட்டு மிஞ்சினால் மூக்கறச்சிக் கீரையுடன்
காலந்தள்ளி.... அமைதியாய் உடல் அசைந்து உயிர்தாங்கும்.
 

டொச்லாண்ட் எனக்கு எல்லாம் வழங்கி இருந்தது. ஆனால் குண்டை
எப்போது வழங்குமென்று
தெரியாமற்போய்விட்டது! தெரிந்திருந்தால்....
என்வீரியம்.... என் கனவு.... என்
மனைவி....
 
நான் அகோர இடிபாடுகளுக்கிடையில் இருந்து என்னை விடுவித்து, என்
மனைவியை.... என் மழலையை அண்மிக்க முயற்சித்து தோற்றேன்.
சில நிமிடங்கள் கழிய.... கீக், கீக் ஒலி செவிகளில் பட்டுத்
தெறித்தன.

இது எனக்கு அதே குண்டு வெடிப்பின் ஒலியை ஞாபகமூட்டியது.
நான் பிரபஞ்ச இரைச்சலுக்குள்....
இப்போது அத்வைதம் அம்மணமாய் எனக்குள் சதிராடியது.
சிவப்பு வான்களில் வந்தவர்கள் ஓடியடித்து எமை அண்மித்தனர்.
அவர்கள் Notruf காரர்கள் (அவசர அழைப்புக்காரர்கள்)
கற்குவியல்களுக்குள்ளிருந்து என் மழலையை இழுத்தெடுத்தார்கள்.
அது துவண்டுவிட்டது.
 
நான் அப்பன் என்று கூறிக்கொள்ள இயலவில்லை. அப்பனுக்குரிய
முறையில் அவனைப் பார்க்கவில்லை. அவன் வாழ்நாளில் பல மணி
நேரங்களை நான் அவனுக்காகச் செலுத்தாமல் புத்தகங்களுடன்
செலுத்தினேன். மழலையொலி கேட்டு ஆனந்தமடையாமல் நூ
ல்களுக்குள் புழுவாகிப் போனதாலேயோ என்னவோ அவன்
என்னைவிட்டு இப்போது வெகுதூரம் சென்றுவிட்டான். நான் எனக்குள்
நொந்து வெதும்பினேன்.

இனி இங்கு எந்த சவக்காலையில் நிம்மதியைத் தேடுமோ?
நான் இதையறியேன்.

ஏதோவொரு மூலையில் உணர்வு மரத்தவளாய் மனைவி.
அவள் விழிகள் வீங்கி நீர் சுரந்து.... அகோரமான வாழ்வுப் படலத்தை
சொல்லாமற் சொன்னது.

இருவிழி சிந்தும் நீரைப் பாராதே என்
இதயம் மகிழ்வதைப்பார்! என்று அவைகள் கூறவில்லை.
இயற்கை வலிமையுடையது.

சூட்சுமமாக சிலவற்றைச் சொல்லும்.

மனைவியின் விழிகள் எனக்கு இப்படியே பட்டது.
தன் தொப்புள் கொடியுடன் இணைத்து வைத்த இயற்கை, தற்போது
தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகப் பிதற்றினாள். துவண்டதை
அணைத்து மூர்ச்சையானாள்.

அவள் உடலெங்கும் இரத்தக் காயங்கள். தலையிலிருந்து குருதி
வடிந்து அவள் கூந்தலை சிவப்பாக்கியது.
என் குழந்தையின் பால்போச்சி ஒரு மூலையில் சிதறாமல் கிடந்தது.
என் குழந்தையும் இப்படி....

என் விழிகள் பனித்து மீசை வழியாக உதட்டை அடைந்தது.
உப்புநீர், சீதை சிந்திய கண்ணீர் மலைபோன்ற எதனூடோ சென்று
எங்கோ அடைந்ததாம். எனக்குள் ஒரு கம்பன் இருந்தால் எப்படி
வர்ணிப்பானோ தெரியாது.

ராமாயணத்தை சுவைபட விளக்கிய ஆசிரியர் சபாரட்ணம் என்
விழிமுன் வந்து போனார்.
 
எல்லாம் கனவுபோல் விரிந்து கொண்டன.

என் மனைவியையும் என் மழலையையும் கிடத்தியும் எடுத்தும்
சென்றார்கள். என்னைக் கைத்தாங்கலாய் கூட்டிச் சென்றார்கள்.
நேரம், அதிகாலை நான்கை நகர வைத்தியசாலை காட்டியது.
எனக்கு மருத்துவ விடுப்புத்துண்டு பத்து நாளைக்கு எழுதப்பட்டது.
கூடவே உடற் சிராய்ப்புக்கு பத்துக்கள் போடப்பட்டது.

மனைவியை விபத்து வாட்டில் போட்டு குருதியேற்றினார்கள். அவள்
கடுமையாகக் குண்டடிபட்டுவிட்டாள்.

நான் என் பிள்ளையை எங்கு எடுத்துச் சென்றார்களோ என்று
ஏங்கித் தவித்தேன்.

மனைவியின் உடல்நிலை இன்னும் பெரிய பேரிடியை எனக்கு
வழங்கிற்று. இவற்றையெல்லாம் உணர்ந்துகொள்ள எனக்கு
உணர்வும் உடல் இயக்கமும் இருந்தது.
என்ன பாவம் செய்தேனோ தெரியாது!

புண்ணியம் செய்திருந்தால் நானும் கூடவே போயிருப்பேன். இப்போது
நான்...
 


 
இருள் விடிந்து காலை மணி ஏழாகியது.
என் உடலில் வலுவிருந்தது.
வேலை ஞாபகத்திற்கு வர மருத்துவ விடுப்புத் துண்டு
வழி வகுத்தது.

அத்துடன் வேலைத்தலம் நோக்கிப் போவதாக டாக்டரிடம் கூறி,
மனைவியைப் பார்த்து மனம் நொந்து வேலைத்தலத்திற்குச்
செல்லக் கிளம்பினேன். வழியில் ஞானம் எதிர்ப்பட்டான்.
என்ன மச்சான் உடம்பெல்லாம் கட்டுக்கள்
நான் மௌனமாகியிருந்தேன்.

மச்சான் போன மாதம் வேண்டிய ஆயிரத்தையும் தாவன்ராப்பா.
வீட்டுக்காரர் கொழும்பிலை வந்து நிற்கினம். இப்ப அவையளோடை
ரெலிபோன் கதைச்சிட்டு வரேக்கைதான் நீயும் கடவுளேயெண்டு
நேரிலை வாறாய். காசைத் தாவன்ரா.
 

ஆவீன மழை பொழிய இல்லாம் வீழ
அகத்தடியாள் மெய்நோக அடிமை சாக
மாவீரம்
போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக்கொள்ள....
வேலை
போகுதென்று மருத்துவ விடுப்புக் கொண்டோட
வழியிலே கடன்காரன்
மறித்துக்கொள்ளச்
சாவீடு என் வீட்டில் நிகழ
நான் விழி பிதுங்கி நிற்க...
 
ஞானம் என் நிலைமைகளை அறியும் நிலையிலில்லை.
பத்தாண்டுகளுக்குப்பின் பெற்றோர்களுடன் உறவாடிய நினைவில்
அவன் தன்னை மறந்திருந்தான்.

பின்னேரம் உம்மைச் சந்திக்கிறேன் என்றேன்.
சரி மச்சான்' ஏதோ சிந்தனைவயப்பட்டவனாய் விடைபெற்றான்.
அவனைப் பிரிந்து கிளம்பினேன்.
 
வானம் அழத்தொடங்கியது.
எனக்காக...?
குண்டுச்சிராய்ப்பினால் ஏற்பட்ட காயங்கள் வலியை அதிகமாக்கின
எனக்கு.

நிம்மதி இல்லை.
என் மழலை பற்றிய கனவுகள்.
வாழ்வின்மீது வெறுமை கவ்வியது.

வேலை ஏன்?

மருந்து விடுப்பேன்?

எல்லாம் போனபின் இவையிருந்து இலாபமென்ன?
பொன் எழில்கொள் மேனியைக்
கண்ணீரினால் கழுவி ஆறுவேனோ?
மீண்டும் வைத்தியசாலை நோக்கி ஓடினேன்.
இடையில் விம்மி விம்மி அழுது வீங்கினேன்.
என் செல்வத்தின் எழில் முகத்தைப் பார்க்க மனம் அவாப்பட்டது.

அவன் பொங்கி எழும் முழுநிலவுக்கு ஒப்பானவன். ஆனால் அகதி.
கண்கள் மீண்டும் பனித்தன.
 

"விழிநீரினூடே அவன் மலர்ந்தான்.
விழி நீரிலாட அவன் மலர்ந்தான்.
குயிலும்
கரும்பும் செழுந்தேனும்
குயிலும் யாழும் கொழும்பாகும்
அயிலும் அமுதம்
சுவைதீர்த்த
மொழியைப் பிரிந்தான் அழியானோ...!"
 
சீதைக்கும் ராமனுக்குமா இது பொருந்தும்....?

எனக்கும் தாம்!

என் மழலையை எந்தச் சவக்காலைக்கு
எடுத்துச்
சென்றிருப்பார்கள்...?

மனைவியின் நிலை எப்படியோ? கேள்விகள் நீண்டன.
இரத்தம் ஏற்றினார்கள். எய்ட்ஸ் இரத்தம் வேண்டாம். பிளாஸ்மா மூ
லம் வைத்தியம் பார்க்கச் சொன்னேன்.

டாக்டர்கள் கேட்கவில்லை.
அவள் நிலைமையை நானறியேன்.
ஓடினேன். ஓடினேன். என் குழந்தை நினைவால்.
அவள் நினைவால். வைத்தியசாலை அண்மித்தது.
என்னவளின் கட்டிலைச் சுற்றி பத்துக்கு மேற்பட்ட கருப்புத்
தலைகள் தென்பட்டன.
 
என்ன தம்பி உமக்கு இப்படி...? பெரியவர் ஒருவர் நா தளதளக்க
கேள்விக்குறியால் ஆறுதல்படுத்தினார்.
ஞானமும் மௌனமாகித் தலைகுனிந்து அவர்களுள் நின்றான்.
மனைவி கோமாவில் இருந்தாள்.

நான தலைமை வைத்தியரிடம் என் மழலைபற்றிய விபரம் அறியச்
செல்வதாய் அவர்களனைவருக்கும் கூறிச் சென்றேன்.
என் மழலையைப் பார்க்க யாவரும் வருவதாய்ச் சொன்னார்கள்.
பதில் கிடைத்தது.

தென் சவக்காலையில் மழலையின் உடலிருப்பதாய் பதில் வந்தது.
ஓடினேன் மீண்டும்.

அவர்களும் பின் தொடர்ந்தார்கள்.
பஸ், டிராம், கார் யாவுமே மெதுவாகச் செல்வதாய் உணர்ந்தேன்.
இதனாற் கால்களினால் ஓடினேன். ஓடினேன்.

பின் தொடர்ந்தவர்கள் எவரையும் திரும்பியபோது காணவில்லை.

இடைவழியில் களைப்புற்று வீதியோரம் வீழ்ந்தேன்.

இதயம் பலமாக அடித்தது. நெஞ்சு வலியெடுத்தது.


"மண் சுழன்றது. மால்வரை சுழன்றது,
மதியோர் எண் சுழன்றது, சுழன்றது
அவ்வெறி
கடல் ஏழும்
விண் சுழன்றது ,விரிஞ்சன்
கண் சுழன்றது,சுழன்றது
கதிரொடு
மதியும்.... "
என்று கம்பன் சொன்னதுபோல் நான் சுழன்றேன்.
வாய்மட்டும் அசைந்தது.
 
ஆவீன மழை பொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய் நோக அடிமை சாக
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத்
தள்ளவொணா விருந்து வர சர்ப்பந்தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள் வந்து தட்சணை கொடு என்றாரே எனப் புலம்பினேன்.

எனக்கு நீர்த்தாகம் எடுத்தது. நா வரண்டு கண்கள் இருண்டன.
சாவோலை கொண்டு யாரும் எதிரே தோன்றவில்லை. அது என்
வீட்டிலேயே நிகழ்ந்தது.

அகதி வாழ்வில் விருந்துக்கு வர யாருமில்லை.
கோவேந்தர்கள் கடமை கேட்க வந்தார்கள் குருக்கள் வடிவில் போன
கிழமை.

அவர்கள் அவசரகால யுத்தநிதி என்
விருப்பை அறியாமலே ஐந்நூறு
மார்க் என எழுதி ரசீது தந்து பணம் அபகரித்தார்கள்.
இவை யாவும் காட்சியுருவாகின.
கண்களை இருள் முழுமையாக கவ்வியது.
நான் மூர்ச்சையானேன்.
நினைவு திரும்பியபோது ஒரு வைத்திய சாலைக்கட்டிலில் கிடப்பது
புரிந்தது.

கண்ணெதிரே என் மழலை ஓடியாடுவது புலப்பட்டது.
விழிகளைக் கசக்கி மீண்டும் பார்வையைக் குவித்தேன்.
கண்ணீர் மட்டும் நிஜமாகிது.
விழிகளை இறுக மூடினேன்.
மனைவியின் ஞாபகம் பின் தொடர்ந்தது.
அகத்தடியாள் மெய்நோக...

அவள் இறக்கமாட்டாள் தன் மழலையின் உடலைப் பார்க்கும்வரை.
வைத்தியசாலைக் கட்டிலைவிட்டு எழ முயன்றேன். முடியவில்லை.
உடல் பலவீனப்பட்டுப் போய்விட்டது.

மீண்டும் என் மழலையின் பேச்சொலி செவிகளிற் பட்டுத் தெறித்தது.
இப்பேது கண்களில் இருந்து நீர் வரவில்லை.

வரண்ட பார்வையை சாளரத்துக்கூடாக வெளியில் செலுத்தினேன்.
வானத்தில் முழுநிலவு வட்டமிட்;டது. அது என் மழலையின்
நிர்மலமான தோற்றத்தை உரித்து வைத்தாற்போல காட்டி நிற்க.
என் வாய்மட்டும் ஆவீன மழை பொழிய இல்லம் வீழ...? என
முணுமுணுக்க விழிகள் பனித்தன.
 
 
10.12.1992
ப.வி.ஸ்ரீரங்கன்

P/S:நிழலோவியம்:இரமணிதரன்-நன்றி.

Sonntag, 25. Januar 2009

உயிருறிஞ்சும் மண்ணுக்கு...

மகா பெரிய ஒழுங்கு:

உயிருறிஞ்சும் மண்ணுக்கு!

(புனைவு)


விபரஞ் சொல்ல முனைந்து...


சங்கொலியும்,கொடியும் வான் நோக்கி...

தவில்களில் தடம் புரண்ட விரல்களின் நர்த்தனத்துள் நாதஸ்வரம் ஓய்ந்தே போனதென்றால் அப்பப்பக் காதும் அதிர்ந்ததாக எடுத்தாண்டு கொள்(ல்)க!

அடாத மழை பொழியுங்கால் விடாத நாடகம் நடாத்தியே காட்டும் ஜில் ஜில் ராஜபக்ஷ தியேட்டர் கம்பனி,நடுவினில் கோமாளிக் குஞ்சுகளாகக் கொக்குத் தலையில் வெண்ணை தடவிப்..."பேச்சு வார்த்தை"பாடம் நடாத்த தென்கோடிப் பேரரசர் தெவிட்டாத டக்ளஸ் மாத்தையா.கிழக்குத் தமிழ் செழித்தோங்க ஜனநாயகப் பசளையிடும் சின்ன மண்ணா-பெரியமண்ணா சிறப்பு அதிரடிப் படைகள் திரண்ட வெண்ணையில் முகத்தைப் புதைத்தபடி...இழவு வீட்டில் பெயர்ப் பலகைத் தட்டியை நிறுத்திய ஒரு கணப் பொழுதில் ஓய்ந்தது யுத்தம்,ஒழிந்தது பஞ்சம் கிழக்குக் குடிசைகளுக்குள்.

விதியே விதியே வினை முடிப்பாயோ?விண்ணஞ்சும் அதிர்வேட்டுப் போர்முழக்கும் விதித்தப் பல கட்டளைகளில் காலம் அறுந்து சிதைந்தது,சிரித்த தந்தையின் உணர்வுக்குள் சில்லறைகள் கல்லறை அமைக்க,கடுகு தேடிய தாயோ"மாவீரர் மரணம்"அற்ற வீடுகளும் இருக்கக் கண்டாள்.மடியிலே சுமைகொண்ட புலம் ஐந்தும் வதை செய்யப் புக்கினாள் தேசியக் கோட்டை.


கோட்டை(கொட்டை)யடியில்:



"இராணுவம் தேசியக் கொடிக்கு மட்டும் மரியாதை செய்யும் பட்சத்தில் தனி நபரின் மரணம் எதையோ உரைத்துச் சொல்கிறது".-காப்டன் கூறிக்கொணடான்


"ஒரு இராணுவப் படையணி நகரொன்றை மட்டும் பிடித்து எதிரியை வேட்டையாடும்போது இவ்வூழ்வினையுள் ஏதோவொன்று நிலவுகிறது."-ஜெனரல் கூறிக்கொண்டான்.


தேசாபிமானி கூறினார்:-" இறுதி மனிதன் இருக்கும்வரை நாம் போராடிச் சாகவேண்டுமானால்,இச் சாவு தாய்நாட்டிற்காக மட்டும் உபயோகமாக வரவேண்டும்".


தூரநோக்குடைய பண்பாட்டு வரலாற்றியலாளர் தூரப்பார்த்துவிட்டுக் கூறுகின்றார்:" எப்போதாவது இரு நாடுகள் -இரு இனங்கள் சுயமாகச் சிதைவுற்றுப்போனால்-அவை வீணான காரணங்களுக்காகச் சிதைவுற்றுப்போகவில்லை.உலகம் தன்னைத் தானே ஞாபகப் படுத்திக் கொள்வதும்,புதிதாய் மலர்வதும்,மேல்நோக்கி வளர்வதும் வேண்டும்.கூடவே தனது இரத்தக்கறை படிந்த மனித வரலாற்றை கழுவியாகவேண்டும்".


முதிர்ந்த புத்திஜீவி தனது குளிர்ந்த விரல்களால் நீண்ட தாடியைத் தடவியபடி:-" குழப்பம் நிறைந்த பழைய முதலாளியத்தை- நவகொலனித்துவத்தை எடுப்போம்,உலகம் பூராக மீளவும் இவர்களால் குற்றச் செயல்கள் செய்ய எப்படிச் சாத்தியமாச்சு?தோட்டத்துக்குப் பசளையிடுவதுபோன்று மனிதம் பலியாக்கப் பட்டு-கொலையாக்கப்பட்ட பூமிப் பகுதியை மூடி மறைத்து, காத்திராது தங்கள் அறுவடையை செழிப்பாக்கி வளர்த்தெடுக்கிறார்கள்.கூடவே பாசாங்கு விளையாட்டுப் போட்டிகளால் வேறு மக்களைச் சுரண்டியும்,அவர்கள் மூளையைச் சலவை செய்தும்...!" மீளவும் தலையைச் சொறிந்தார்,வானத்தைப் பார்த்தபடி.


கடவுள் கூறிக்கொண்டார்:-

" எனது சூரியக் குடும்பம் இருபத்தி நான்காவதுக்கு,அரேபியும்-ஆங்கிலமும்-மூத்த
குடித் தமிழும்... தொலைந்தது இந்தப் பூமிக்கிரகம்.இது சௌபாக்கியமான அர்த்தம்
நிறைந்ததாக இப்போது தோன்றுகிறது. சிலவேளை இப்படித் தொலைந்தது நன்மையே! என்
விருப்பத்தின் பொருட்டு எப்போதாவது இந்த எல்லாச் சூரியகுடும்பத்தையும் பிரபஞ்ச
ஒழுங்குக்கு பொருந்தி வரக்கூடியதாக மாற்றிக்கொள்ள..."

ஆத்திரப்பட்டுக்கொண்டார்.

"என் பிள்ளைகள் பத்திரமாக மீளவும் வீடு திரும்புவார்களென்றால் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று விட்டுவிடலாம்".- வன்னியிலிருந்து திருமதி.சுப்ரமணியம் கூறிக்கொண்டார்.

ஆட்கொள்ளல் கண்டு அரண்ட பொழுது:

"டொலர்களில் பரிமாற்றும் மேற்குலகில் செய்வததென்றால் பிடித்தசிறார் வீடு மீள்வாரென" தமிழ் நியாயம் சொல்ல நிலவு, அடிவானில் அமிழ்ந்து வானம் சிவந்தது.


பிற்குறிப்பு:

எனது கைகளிலிருந்த வறுத்த வேர்க்கடலை வாயிலிருந்து ஏதோவொரு அமிலமாக வெளிச்சத்துக்கு வந்தது.

இலங்கையரசு தமிழ் மண்ணை மட்டுமல்ல அழித்து வருகிறது என்ற தொடரில்...மக்களை,குடும்பத்தலைவரை,சிறார்களை,பெண்களைக்குதறி...பத்திரிகையாளரைக் கைதும் செய்து கஷ்ரடியில் வைத்துக் கொல்வதென்றும் புலிகள் சர்வதேசத்துகுச் சொல்லும் துண்டுப் பிரசும் தொழிலாளர் தினத்தில் தோன்றக் கண்டார் கையிலை மலையில்.

வாஸ்த்தவம்தான்!,வாடிய பயிரைக் கண்டபோது வாடியவர்கள் "அவர்கள்"மட்டுமல்ல நம்ம தேசத்துச் சிங்கள-தமிழ் அரசுகளும்தான்.

"தாங்காதம்மா தாங்காது,தாகம் தீர்ந்து போகாதம்மா போகாது!"தம்பிக்குத் தங்கைக்கு பெட்டிக்குள்ள பெரு வீரம்,பேரென்னவோ"பெரியாருக்கு"-போருக்குள்ளே
புகழுண்டு,ஊருக்குள்ளே இழவுண்டு!

வட்டக்(நோட்டு) கனவு கொட்டக் கொட்ட வடக்கு மறுத்துக் கிழக்கைப் பிரி,வலிந்த பக்ஷ வாரித்தந்த "தீர்வை"மாகணங்களுக்குள் கண்டபோது சபைக் காச்சல் ஏறிய டிகிரியில் சொக்கிய குருதி நினைவைப்பறிக்க மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனை செய்ய...

ப.வி.ஸ்ரீரங்கன்

போக்கிடம்

(புனைவு)

நான் தனிமையாக இருந்து கொள்கிறேன்.அதுவொரு கல்லாசனம்.ஒரு தொல்லையுமில்லாமல் நான் இருக்கவேண்டும்.ஆனால்,எங்கு போனாலும் தீ எரிந்து கொள்கிறது!,மனம் போக்கிடம் தேடியலைகிறது.வெகுவாக நான் அழிந்துவிட வேண்டும்,முடியவில்லை.

காற்று நன்றாக வீசி,குளிரை நிறைவான வகையில் அள்ளித்தெளிக்கிறது.நானிருக்கும் இந்தக் கல்லாசனம் எனக்கு மட்டுமே பொருத்தமாகக் கட்டப்பட்டவொரு சிம்மாசனம்.இதில்,என் வாழ்வின் நெருடல்கள்,மீட்டல்களில் சிக்கித் தவிக்கவேண்டிய ஒரு நியதிபோலும்


என் வசமுடையவை சிலருக்குச் சின்ன விடயமாகவிருக்கும்,எனக்கும் அப்படித்தாமிருந்தது
நேற்று வரையும்.ஒன்றுடனொன்று சேர்ந்து கொல்கின்றன இன்று.
நான் மௌனத்தின்
பிரதிநிதியல்லவே,உள்ளம் மௌனத்தின் பிடரியில் ஓங்யோங்கி அடிக்கிறது.

ஒற்றையடிப் பாதையொன்றில் நேற்று நடக்கின்றேன்.கூடவே என் சுயத்திற்கு சங்கேத பாஷையில் சமாதானஞ் செய்கிறேன்.பீறிட்டெழும் உணர்வுகள் என் சுயத்திற்குச் சமாதிகட்டிகொண்டிருக்கின்றன.மொத்து,மொத்தென்று உணர்வுக்கு மொத்த முடியவில்லை.

அந்தப் பாதை தொடர்ந்து கொண்டது.நான் ஏதோவொரு உந்துதலால் தள்ளப்படுவதுபோன்றவொரு உணர்வோடு மேலும் நடக்கிறேன்.

வீடு திரும்பி விடலாமேயென மனது பிராண்டிக் கொண்டது.ஆனால் முடியவில்லை.உணர்வினது அவசியத்துக்கு எதுவுமே முட்டுக்கட்டையிடத் தகுதியின்றி ஒதுங்க,நான் முடியாது திணறிக்கொண்டேன்.

உருக்குலைந்த நியதிகளாய் என் நியதிகள் மாறவேண்டுமென்றிருந்தால் அஃது நடக்கத்தாம் போகின்றது.சரிபோகட்டும்.என் விழிகள் உஷ்ணக் கொதியில் வெந்து,குருதி தோய்ந்த கோலிகள்போல் வெளியில் தோன்றி,உப்பிக்கொண்டன.

யாராவது நம்ம சனங்கள்...அதாவது, இப்போதையப் பையன்கள் கண்ணுற்றால் என் கோலத்திற்கு இன்னுமொரு பட்டத்தைச் சும்மா தூக்கித் தந்துவிடுவான்கள்.ஏற்கனவே,எனக்குக் "காய்ச்சல் மாமா"என்றொரு அருமையான பட்டத்தைத் தந்தாங்கள்-எழுபதுகளில் நான் பட்டம்பெற எத்தனை குத்துக்கரணங்கள்போட்டேன்!

நல்லவேளைதாம்.எந்தத் தமிழ்ப் பயல்களும் காணவில்லை இந்தக் காய்ச்சல் மாமாவை.ஆனால்,ஜேர்மனியர்களும்,வேறு சனங்களுமாக என்னைப் பின் தொடர்வதாகவும்,விலத்திச் செல்வதுமாக இருக்கிறார்கள்? அப்படியொரு உணர்வும் குறுக்கே வந்து தொலைவது இந்தச் சலனப்பட்ட மனதுக்குத் தெரிந்து கொள்கிறது.அவர்கள் எல்லோரும் மேவிக்கொள்ளும் தரணம் என்னைப் படுத்தும் இந்தக் கோதாரிக்கு அபத்தமாக இருக்கிறது.

அந்தக் கோபுர வாசலை நெருங்க இன்னுஞ் சில மீற்றர்களே இருக்கிறது.

கைலாசத்தின் கதவு தானாகத் திறந்து,என்னைப் பச்சைக் கூட்டோடு பரலோகத்துக்கு அனுப்புவதற்காக உள்ளே அழைக்கிறது.அந்தத் தவம் நிறைந்த ஆனந்தம் அற்புதமாக என்னுள் பரவ பிறப்பின் அர்த்தம் புரியும் ஒரு திசையில் இந்தப் புதினம் புண்ணாக்கும் என் ஆன்மாவை.பொழுது சரிந்துகொண்டது.அப் பகுதியல் கால்வைத்ததும் மனத்தின் அதியுச்சக் கிலேஷம் சிலிர்த்து என் சுயமாக விரிந்தது.எனக்குள் முக்காடிட்டிருந்த என் உண்மை முகம் இதுள் தொட்டிலிட்டு ஆடிக்கொண்டது.நான் காலத்தில் வாழும் ஒரு நிலையில் என் பாலீர்ப்புப் படலம் பாய்விரிக்கும் அன்றைய தரணத்தை மனதுள் விரித்தது.மாங்காய் பறித்து நாமிருவர் புசித்த எச்சில் இனித்த பொழுதில், உதட்டில் குருதி கசியும் ஒரு நிலையில்-எங்கள் காதல் உயிர்த்திருந்தது.இது அன்று.இந்த விடாய் பானத்தை நாடிச் செல்லும் தவித்த மனிதனாய் என்னைத் துரத்துகிறது.இந்த விடாய் ஊனமிக்கதான செயலாக எனது பக்க நியாயங்களால் தீர்ப்பெழுதிக் கொள்ளும் எந்தத் தரணமும் இப்போது இல்லை.நான் அந்தக் கோபுரத்துள் நுழையும் இந்தக் கணம்,நீரின்றித் தவித்த மீனின் நிலையாய் இருக்கிறது.அவ்வளவு வேட்கை-வேதனை!

இதுவொரு சாபக்கேடா அல்லது உடலுடன் கூடப்பிறந்த வஞ்சக நெஞ்சத்து நஞ்சா?வடிவமில்லா
இந்த வம்பு உணர்வுக்கு வதைபடும் தரணங்களும் உண்டுதாமோ?

எனக்கு வயது அறுபது கடந்திட்டபோதும் உடலின் வலுக் குறைந்தபாடில்லை.அது பதின்ம வயதுப் பேரப்பிள்ளையின் உருவத்தோடு என்னுள் புகுந்து என் மனதின் பொழிவுகளை வலுப்படுத்தியதால் நான் தோற்றுக் கொண்டிருக்கிறேன்.இந்தத் தோல்வி "நான் மட்டும் எப்படி?...,ஏனிந்தப் பிறப்பில் மட்டும்தானே உயிர்த்திருக்க முடிகிறது,நாளை மடியும்போது அந்தப் பழுப்புடல் ஏக்கம் என் கட்டையை வேகாது விடாப்பிடியாய் தீயிலிருந்து மறுத்தொதுக்கினால் என்னதாம் பண்ணுறதாம்"என்று எனக்குள் விரிந்ததும், நான் இதைக்"கொடூரம்,என்னால் சகிக்க முடியவில்லை,ஊரை நினைத்து நான் தினம்,தினம் சாகமுடியாது"என்று சமாதனஞ் செய்தேன்.


புறத்தே என்னைக் கொல்லும் சூழல்,ஜேர்மனியின் கோடைகாலம் என்னைக் கொல்லுந்தரணத்தையும்
அப்படியே அழைத்து வந்துவிடுகிறது.இது என்னைக் கொழுத்திச் சாம்பலாக்கும்.நான் இதனை
வெல்லத் தவமிருக்கும் ஒவ்வொரு பொழுதும் என் இதயத்துள் முள்ளாய் குத்தும் அந்த
உடல்கள் தொப்புள் காட்டிக் கண்ணடிக்கிறது.முடியவே,முடியாது!அந்த மாமுனிவர்களும்
அடங்கிய அற்புத் தொப்புள் குளத்தில் நீரில்லை தெள்ளத் தெளிந்த தேனால் நிறைந்த தேகப்
பரப்புள் இந்தக் குளம் தேவலோகத்துக் கனவுகளைக் கூட்டிவந்து என் குருதியைக்
குடிக்குந் தர்மத்தை எனக்கு ஒழுங்குபடுத்துகிறது.

நான் ரொம்பப் பாவம்.தொப்புளிலிருந்து சாணளவு இறங்கப் போடும் ஒவ்வொரு உடையிலும் உழுத்துப்போகும் உணர்வுக்குள் எனது உணர்வும் அடக்கம்.அந்த உடையைத் தாங்கும் சதைப் பருக்கையும் மானுடம்தாமே?இல்லை என்னைப் போன்றதொரு பாலீர்ப்புப் பிண்டமா?பாவிகள் இரட்சிக்கப் படுவார்கள். நீ,படும் பாட்டில் இதுவும் தேவைதாம்.

இப்போது, நான் இந்த ஈர்ப்பு வலயத்துள் மெல்ல வருகிறேன்.

காலம் மிகப் பின்னோக்கி நகர்கிறது.இளமையும்,பொலிவும் ஒருங்கே ஊஞ்சலிட ஒருத்திக்குப் பின்னால் அலைந்ததில் மூன்று பெண்களும்,இரண்டு பையன்களுமாக எனது வீரியத்தின் பாய்தல் விடாப் பிடியாய் பிடித்துக் கவ்விக் கொண்டது...

இப்போதைய அகதியக் குந்தலில் எனக்கு இஷ்டமில்லையென்றாலும் அள்ளிச் சுவைக்க முனையும் இந்தப் பாற்குடங்களால் பாதி விருப்பும் மீதி வெறுப்புமாக வேளா வேளைக்கு வீணிய+ற்றிக்கொள்வேன்.என் பேரவாவின் வினைப் பயன்கள் எந்த வேதனையுமின்றி வீராப்பு நிறைந்து அகதியத்தில் பதியம் போட்டுள்ளார்கள்.அவர்களால் இறக்கப்பட்ட எனது வருகைக்கு அர்த்தமொன்று இப்போது தெளிவாகிறது.இது வாழ்வினது அர்த்தமா அல்லது உடலினது உச்சபச்சத் தாகமென்பதா? இனித்தாம் அறிய வேண்டும்!

கால்கள் கூசுகின்ற இந்தக் கணத்தில் உடல் வலுவிழப்பதுபோன்ற மிகுந்தவுணர்வை அவர்கள் அறிவதால் என்னை நெருங்கி வருகிறார்கள்."வயோதிபமென்பது ஒரு பொருட்டல்ல,வாருங்கள்"என்று மென்மைக் காந்தக் கரங்களால் அணைக்கப்படும் என்னுடல், உலகத்தின் எந்தப் பெரிய அழகையும்விட-அற்புதத்தையும்விட இதுள் மிகப் பொலிவானவொரு அமைதியை,பேரின்பச் சுருதியை உணரத் தலைப்பட்டது.அந்தவுடலுள் ஊஞ்சலாடும் உணர்வுக்கு இன்று பாலாபிஷேகம்.

எல்லாம் சங்கமமாகிவிட்டதென்று கூறுவதற்கில்லை.என்னது தோலோடு மோதி
நிலைப்படைந்தது.நீண்ட போராட்டத்தின் பின்னானவொரு பொழுதில் மிகப் பொருத்தமாக
விரிவடைந்தது அந்தக் கதை. அவ்வளவும்தான் வாழ்வு.ஒரு நுணுக்கமான
விரிவு,அசைவு,திரண்டொழுகும் ஒரு குமிழி.


வீடுமீண்டபோது களைப்படைந்தவுடலுக்குத் தீனி அவசியமாகி இருந்தது.விழியில் சோற்றுப் பருக்கை ஒட்டியிருப்பதென்ற உணர்வுக்கு மாறாய் என் மகள் தென்பட்டாள்.தெரிந்துகொண்ட உடலுக்குள் அவள் புகுவதுபோன்றவொரு நினைவால் நான் துரத்தப்பட்டேன்.எனது புறமுதுகில் குத்தும் பிரமைக்கு ஈவு இரக்கமென்பதெல்லாம் அமெரிக்கப் பாணியிலிருந்தது.எல்லாம் வல்லோனே,ஏனிந்தக் கொடுமை எனக்கு?எவர்கெடுத்து உரைக்க!எனது மகளின் உருவத்துள் நினைந்துகொள்ளும் இந்த மனத்தின் குரங்குத் தனத்துள் துள்ளிக் கொண்டபடி கொதித்தெழும் அந்தப் பிசாசுக்கு வயது பதினாறாய் இருக்கவேணும்.இல்லையானால் அது அடங்கிக் கிடக்குமே!அறுபட்டுப்போன பட்டத்து நிலைக்கு நானும் எனது மனமும் எவ்பவோ வந்துவிட்டதென்பதை உணரும் ஒரு துளி நாணயம் எனக்குள் பெருகிச் சிறுத்தது.மகள்வீடு தாண்டி மகனது இல்லத்துள் மிதந்தபோது மருமகளே என்னை வரவேற்றாள்.

"மாமா,வாங்கோ மாமா"என்ற அவளது குரலில் மாமாவுக்கு மோன இலயம் பீறிட்டபடி.மடிப்புக்கழராத அவளது முன்னுடலில் பூக்கள் கொலுவிற்றிருப்பதும் அது என்னைத் தன் வாசத்தால் சுண்டியிழுப்பதும் பொல்லாத பொழுதுகளின் நிந்தனைக் காண்டமாக விரிவதில் நான் வெறுப்படைவதும் பின்பு அதுவேயொரு சுவையான உணர்வாகவும் விரிந்துகொள்வதும் இயல்பாக... நான் அவளைத் தினமும் மனதிலிருத்தி என் மௌனத் தாகத்தைக் கொட்டுவதுமாக எனது கடன்கள் கழிவதுமாகச் செல்கிறது இந்தக் கணம்.என் பேரப் பிள்ளைகள் என் தோளிலும் மடியிலுமாக விழுந்து விளையாடும் உன்னதமான இந்தத் தரணங்கூட அதுகளின் தாயின்மீதான தவித்தெழும் என் அகக் குடைச்சலாக விரிவதில் நான் சிறுத்துக்கொள்கிறேன்.இந்தக் கேடானவுணர்வுக்கு எந்தத் திசையும் தெளிவில்லை.போதையாய்ப்போன பசிக்கு உத்தரவாதமான எந்தவுறமுமில்லை.எத்தனை காலத்துக்கு இந்த ஏகத்தைத் தவிர்ப்பதற்காக ஏங்கித் தொலைவது?முடியவில்லைப் பேரின்பமே!

நான் எனக்குள் அழிவதும் மீண்டும் உருப் பெற்றுக் கொள்வதுமாகச் செல்லும் இந்தப்
பொதுப் புத்தியுள் பேரின்பமாக விரியும் அந்தவுருவம் ஒரு பெண்ணுக்குரியதாக
இருப்பதில் எந்த நியாயமும் இல்லை.அதுவொரு வடிவம்.எந்தப் பொழுதிலும் பேரிரைச்சலாக
விரியும் ஏதோவொரு அசைவில் என்னைக் கட்டிப் போட்டிருக்கும் சக்தி அது.

அதை மீறிப் போவதற்கான எந்த உந்துதலும் எனக்குள் பீறிட்டுக்கொள்ளவில்லை.எனது மோனைத் தவம் இந்தத்தடத்துள் எப்பவும்போலவே புதுமைக் கொலுவிற்றுச் செல்கிறது.வானம் இருண்டு முகில் கருமையாகக் குவியுந் தத்துருவமானபோது என் தலைகளில் உருளும் நீருக்குள் நான் உருகிக்கொள்வதும்,இருக்குமிடம் மகனதோ இல்லை மகளதோ என்ற கேள்வியின்றி என் திசையில் எங்கே தோன்றிய ஒரு புள்ளியில் இருப்பதான இந்தக் கூத்துக்கு நான் பொறுப்பேற்க மட்டும் உணர்வு தவித்தது.

தெருவிளக்குகள் ஒளிர்கின்றன.அந்தவொளியில் சிதறும் நீர்த்துளிகள் என் மௌனத்தைக் கலைப்பதில் தோற்கின்றன.எனது போக்கிடம் குறித்த ஏதோவொரு பொறி என்னைச் செம்மையாகத் திட்டுகிறது.நான் உறுவுசொல்லிப் போக்கிடம் தேடிய காலம் இனி மலையேறியதாகவே எனக்குள் குப்பையாக விரிகிறது.நான் செம்மையுறும் உணர்வில் ஏதோவொரு அற்பத்தனத்தை அந்தச் செயலுக்குள்ளும் நீட்சியாவதை உணரும்போதே இது அவ்வளவு சீக்கரம் முடியுமொரு அத்தியாயமாக எண்ணத் தலைப்படவில்லை.

அந்தக் கல்லாசனத்தை விட்டகலும் வேளையில் தன்னியல்பாக நான் நடக்கும் இந்தக் கோலம் மனிதனாக இருக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் என்னிடமிருந்து தொடர்ந்து உற்பத்தி செய்கிறது.நான் எவரையும் நினைந்துருகி எனது அவாக்களை மறைப்பிட்டுக் கொள்ளும் பொய்மைக்குள் புகவில்லையென்பதில் எனது திமிர் உண்மையாய் பெறுமானமுடைய உணர்வில் தவித்தது.

என்னைவிட்டகலும் அந்தச் சொற்ப கணத்துள் அவன் எனக்குப் போர்வை தந்தான்.

நீருள் நனைந்த உடலோடு பிடவைகளும் ஈரமாகியதாக எண்ணும் சந்தர்ப்பத்தில் அவற்றைக் களைந்து எங்கோ போட்டேன்.அடிக்கடி இரயில் வண்டிகளின் அதிர்வில் அமைதியிழந்த எனது மனதுக்குத் தூக்கம் ஒரு கேடவென்று தோன்றியபோது எனக்குப் போர்வையிட்ட அந்தக் கரத்தின் வருடலில் விறைத்துக் கொண்ட என் தவப் பயன் மீளவும் கக்கிகொண்ட உயிர்த் தெறிப்புகளில் உலகம் இருண்டு கிடக்கக் கட்டிய எல்லாக் கோட்டைகளும் சரிவதாக எனது பையன் படுத்தியபாட்டில் எனது தெருவாசம் புலப்பட்டும் நான் என்னைத் தொடர்ந்து நகர்கிறேன்.என் போர்வைக்காரனோ என்னுள் தவிப்பை ஏற்படுத்திய அந்தத் தருணத்துள் தன்னைப் பின் தொடர வைத்தபோது என் பையனின் குரல் எங்கோ தொலைந்து.

Donnerstag, 22. Januar 2009

அகதிக் காண்டம் நிறைந்தேக...

பெண் பனி.

(புனைவு.)


"நாடா கொன்றோ
காடா கொன்றோ
அவலா கொன்றோ
மிசையா
கொன்றோ
எவ்வழி நல்லவர்-ஆடவர்
அவ்வழி நல்லை
வாழிய நலனே."

அகதிக் காண்டம்:

எங்கெல்லாம் வாழ்வு சுதந்திரமானதாக இருக்கிறதோ வேலைகள் செய்யப்படக்கூடியதாக இருக்கிறதோ அங்கேதாம் "எங்களது நாடு" இருக்கின்றதென்று ஜீல்ஸ் நொடாஸ்க்கி கூறிக்கொண்டான்.அவன் புறநானூறை நிச்சியம் படித்திருக்கமாட்டான்.ஆனால் நான் அக நானூறில் புரண்டு அமுங்கிப் போவதாகக் காலம் பின்னிச் செல்கிறது.பாரீஸ் கம்யூன் போராளிக்கும் ஈழவிடுதலைப் போராளிக்கும் எதோவொரு விதத்தில் தொடர்பாடத்தக்க ஒரு பொறி கிடைத்தால் அது பெரும்பேறான வாழ்வமதிப் பேரவா எனக்கு.

இடப்பட்ட பெயர்:இராஜன் கந்தசாமி.

பிறப்பு:1960

"யார் அப்பாவென்ற உறுதிப்பாடு-ஒழுங்கான உறுதிப்பாடு உனக்குத் தெரியாது.என்மூலமாவது சில தகவல்களை நீ பெற்றுவிடுதல் உன் தவறான பிறப்புக்கு என் உத்தியோடுகூடிய தெரியப்படுத்தல்".-அத்தான்

கொஞ்சக் காலத்துக்கு முந்திய பொழுதொன்றில் நான் தெருவோரப் பொந்துக்குள் காலத்தைக் கழித்தபோது,யாருமே உறவுகொண்டாட-முறைகள் சொல்ல முனைந்ததாக எனக்குகெட்டியவரை ஞாபகமில்லை.இப்போதுள்ள நிலைமையில் கடைந்தேற்றச் செயல்கள் வரம்பின்றி என் தலையில் கொட்டப்படும்போது நான் அந்த எல்லையிலிருந்து எங்கோவொரு தொலைவில்-ஏதோவொரு தொடைச்சதையில் உறவைப் பலப்படுத்தியபடி.

இராஜன் கந்தசாமி என்ற இயற்பெயரிலும் ராகவன் என்ற மாணவர் பேரவைப் பெயரிலும் தோழர் சன்னதிக்குச் சவாரிசொல்லிக் கொடுத்தவன் நான்.என்னுடைய பராமரிப்பில் ஒரு பகுதியிருந்தபோது நானே நடுத்தெருவில் சில தலைகளை உருட்டியவன்.சம்பேதுருவார் கோவிலிலும் அந்தக்கூடுதூக்கும் சம்பவத்திலும் ஞானப்பிரகாசரின் தோட்டாவுக்கு டாட்டா காட்டியவனின் தோளில் ஏறி நிற்க ஆசைப்பட்ட என் அக்காளின் அருமைப் புருஷனுக்கு என் ஆதாரா சுருதி அறியக்காலமுமில்லை,நேரமுமில்லை.கோவில் திருவிழாவில் யாரோ பற்றியெறிந்த சிகரட்டை ஊதியிழுத்த இராஜனாகவே அவரது மதிப்பீடு.ஓரிரவில் மடைதிறக்கும் நீரோட்டமாக நானும் சமைந்தபோது எங்கோவொரு தெருமுனையில் ஊர் சுற்றும் பொடிசுவென்ற என் வீட்டார் மதிப்போடு நான் கோலாச்சிய வரலாறுதாம் கதை சொல்வதற்கான தளமாகும்.

கருக்கட்டிய வரலாறு:

போன ஜென்மத்தில் முக்காலத்தின் முதுமையானவொரு இடைவேளையில் சில நல்ல காற்றுக் கருப்புகளில் வேள்வி செய்யப்பட்ட பொழுதொன்றில் சூரியனையிழந்துபோன புவிப்பரப்பில் பினாட்டுக்கூடையை இழைத்துக்கொண்டிருந்தவளின் தொடைக்களுக்கு நடவே கூரிய ஆயுதம் செங்குத்தாகப் பாய்ந்தபோது அஞ்சல் செய்யப்பட்ட நீர்த்துளியின் பிணைவுடன் கொண்ட பங்கீட்டுப் பிணைவு,உருப்பெற்றதும்-வெளிப்பட்டதும் காலத்தில் வாழும் ஒரு நிலையென அன்று எதிர்வு கூறிய பாதிரியார் சிங்கராஜருக்கே வெளிச்சம்.நாரந்தனையைச் சுற்றிக் கோழிகளை வளர்த்துக்கொண்ட ஒரு கோமான் பாதிரியாகி,பிசப்பான கைங்காரியம் லேசுப்பட்டதல்ல.சின்ன வயதில ஆத்தையின் சேலைத் தலைப்பில் தொங்கியபடி அவரின்ர பிரசங்கத்தால் தமிழில் ஒரு படி நிறைகூடிய மண்டைக்கனத்தை எனக்குள் திணித்த என் தாய்க்கும் வித்தியாசம், வெள்ளை அங்கியில் மட்டுமென்றே நான் கருதுவதும் ஒரு வம்பு நிலைதாம்.

நேற்றைய அல்லது அதற்குமுன்னைய இதையும் மீறிய"எப்பவோ"என்ற நிலைமைக்குள் அறுபட்டுப்போனவொரு அநாதையுணர்வுக்குள் நாவடிய நனைந்து, நுழைவதென்பது ஒரு யுகத்தின் பல மில்லியன் பிளவுக்குள் புகுவது போன்ற சங்கடமான சமாச்சாரம்.ஆனால் என்னைச் சுற்றியவொரு மிதப்பான உறவுக் குழுமத்துக்கு இஃது அவல் தின்னக் கூலியாவென்ற கதைதாம்.அம்மாவுக்குத் தீச்சட்டி தலையில் வைத்தபோது, எனது அப்பாவினது பெயருக்கும்,அடுத்வொரு பெயருக்கும் இடைப்பட்ட வெளிகளுக்குள் என் சுயம் கருக்கொண்டிருக்க நான் வெளிக் கிளம்பியது காலத்தின் கோலமானதாகவே பட்டது.

அப்பனுக்கு ஆடடிச்சுக் குத்தரிசியில் சோறுகாச்சி,மேற்சோறை அள்ளிப் போட்டவளை அம்மணமாய்ப் பார்த்ததாய் அத்தார் அதட்டியபோது,அடங்கிப்போவது நான் என்பதாக அவன் உணராதிருப்பினும்,நோக்கத்திலொரு நீண்ட கனவிருந்தது.எனது கூட்டைப் பிய்த்தெறிவதும்,பேருக்கு முன்னாள் அவலத்தைக்காவுவது என்பதாகவும் அவன் போட்ட முடிச்சுகளை அவிழ்த்துப் பார்ப்பதில் அம்மாவைக் கருவிலிருந்தே கருவறுப்பதாகப் பட்டது!


அகதிக் காண்டம் தொடர்வது...

தேசத்தின் குறிப்பை எழுதுவதில் பலரின்று பிரபலமானார்கள்.பாதியோ மீதியோ, படைப்பாக்குவதில் "பன்னைக்காரன் பொண்டில் பணியக்கிடந்து செத்தாள்"என்றமாதிரி, செவிட்டு இராஜனுக்குமொரு சிங்காரக் கனவு குடைந்தபோது,கை கொடுத்த காலம்தாம் கடைதெடுத்த வம்புத் தனங்களாகிக் கிடந்தது.முற்றிலுமொரு மொன்னைத்தனமான முயற்சியில் கால் வைப்பது "தனக்கெடா வேலை தன் பிடரிக்குச் சேதம்"என்றடிக்கடிக் குறித்துரைத்த சபாரெட்னம் வாத்தியை நான் கிழங்கர் சபாரெத்தினமென்று கரம்பொன் சண்முகநாத வித்தியாசாலைக்குள் வைத்துத் திட்டியதும்,அவரென்ர "இயக்க ஸ்தானத்தில்" கண்டும் காணாததாய் இருந்தபோது நடுத்தெருவில் தலை தெறிக்க நான் "உசக்கப் போய்" ஓவராய் கண்டவர் நிண்டவரெல்லாரையும் கடிச்சுக் குதறியவொரு பொழுதில் கால்முறியுமொரு காலத்தை அருளாநந்தசிவம் மாஸ்டரின் கடைப்பொடி"இது எங்கட இயக்கத்தால் கட்டாயம் நடக்கும் மச்சான்.கெதியாய் மாறு"எண்டபோது சன்னதிக்கு ஆப்பு வைத்தால் எனக்கென்ன!தலை தப்பினது தம்பிரான் புண்ணியமென சித்தப்பாவின் முகத்துக்கு முன்னால் நீட்டிய கரம் "பலதைப்பார்த்த அநுபவத்தை" அவருக்குக் கற்றுக் கொடுத்தபோது நானும் ஜேர்மனியை வந்தடைந்தபோது, எனக்கு அவமானமாக இருந்தது,"தோழமைக்கு இதுவா இலக்கணமென்பது"எப்படியோ சன்னதியைக் குத்திய கத்தி குடலை வெளியில் இழுத்தெறிந்த போது, நாரந்தனை மொட்டை வேளாளரின் மகிழ்ச்சியாய் இருந்ததும்- எனக்கு உயிராபத்திலிருந்து விடுதலைக்கு வித்திட்டதாகப்பட்டது.

தொடைகளுக்கு நடுவில் கோவணம் கட்ட மறுத்தபோது ஜேர்மனியின் "அழகு" நடுச் சாமத்திலும் அந்தமாதிரியாய் இருந்திருந்து அநுபவமாகியது.அப்போதெல்லாம் அக்கம் பக்கதைப் பார்த்து, அப்பனின்ர தங்கச்சி மோளை"தந்தனத் தந்தனத் தளம் வரும் சந்தன..."எண்ட பாட்டோடு பிளிந்தெடுத்த சில பொழுதுகளின் அவஸ்த்தை வந்தே தொலைந்தது.ஆப்பு வைத்த மாதிரி "அகதி"நாமம் சூடிக் கொண்ட பொழுதுகளுக்குள் என்னென்ன ஆறுதலை மாற்றாக்க முடியுமோ அதையெல்லாம் தேடியபோது,இடையில் வந்தவொரு பீடையைக் இன்றுவரை மறப்பதற்கில்லை.

வைத்தியனிடம் போய் "எய்ட்ஸ்"பரிசோதனையில் "நெக்கடீவ்"என்ற அத்தாட்சிப் படிப்பில் நிம்மதி வந்தாலும்,சில நேரத்தில் மனதில் நிம்மதி குலைகிற பொழுதுகளாகவும் சில "குறிப்புகள்"உடலிலும் உள்ளத்திலும் தோன்றி மறையும்போதுதாம் அத்தானைப் பரிகாசிப்பது வெறும் தேவையில்லாதவொரு சமாச்சாரம்.கிராமத்தின் எல்லைகள் பற்பல மறைப்புகளில் கிழிபட்டே கிடக்கிறதென்பதையும்,அதன் மறைப்புக்குள் வேறொரு உலகம் முருகன் கோவில் இரவு உடுக்கை அடியில் அமிழ்ந்து போனதையும் நான் பல பொழுதுகளில் அறிந்திருந்தேன்.இந்தச் சூழலில் சாமி ஆடுபவனின் தொடைகளின் நடுவில் ஆடிய பாம்பு எத்தனை குமரிகளுக்குப் பேய் ஓட்டினதை சீதனத்தில் உரைத்துப் பார்த்தையும் நினைத்தபோதுதாம் என் பிணக்கைத் தீர்க்காத மனதின் "துரத்தல்களை"சிக்மன் ப்பொரைட்டின் ஒளியில் கழுவிவிடுவதில் நான் கஞ்சல்தனம் காட்டவில்லை!

கருச்சுமந்தவளின் கனவு.

அன்று,"தம்பி பசிக்குக் காரணம் கேட்காமல் காசை அனுப்பிவை"எண்டவளை "பெத்தகையோடு பேதியைக்கண்டபோதும் பெருஞ் சுமையாய் எண்ணாத தாயென்று"நான் உணர்ந்தவொரு பொழுது அரிதாகவே பட்டது!காசென்ற குரலிலும்,எழுத்திலும் கடுப்பெடுத்து உடைபடும் என் "புடைப்புகள்"கழண்டலையும் கோவணத்தில் சுழன்றுகொண்டபோது,ஆத்தையின் அடுப்பில் பூனைக்குச் சுகமாய் தூக்கம் வந்தது.

இப்போதெல்லாம் காடாத்திக் கருமாரி செய்த அநுபவத்தோடு அம்மாவுக்கு உணர்வு மரத்துவிட்டிருக்கு!"ஆத்தைக்கு ஒரு பேத்தை" போட்டியாகி "எங்களை நடுத்தெருவில் நிப்பாட்டிப்போட்டுப் போமன்"என்ற ஓலத்தை நான் காதுகொடுத்துக் கேட்டதால் நடுரோட்டில் மருந்தோடு அலைய, ஒருவுயிர் அவாவுற்றழிந்தே போனது.ஒரே கருப்பையில் வெவ்வேறு பொழுதுகளில் கிடந்த கருவூலம் குலைந்த பொழுதுகளை அம்மா நொந்தெழுதியும்,அம்மாவின் கனவுகளைக் கரடியின்ர சொறியாகவே கடுப்பாக்கிக் கடிதத்தொடர்பே ஆகாதென்பதாகக் காரணம் கண்டு,"கனவோடு காலத்தைக் காண்"அம்மாவுக்கு இந்தப் பொறுப்பை ஒப்படைத்ததாக நானும் எண்ணுவதில் என்ன சூத்திரமிருக்கு என்ற ஆதங்கம் வந்து துலைந்தபோதெல்லாம் நான் அப்பனுக்கேற்ற பிள்ளையாக இருக்கிறேன்.

அப்பச் சும்மாவா?

"எங்களுக்கு மூன்று நேரம் உண்ணப் போடத் தன்னைத் தறித்தெறிந்தவனை" அம்மா "ஏச்சுப் போட்டாள்"என்றொரு அடிமன ஊழ்,அகத்திலிருப்பதை மெல்லப் புரிவதில் சிக்கல் வருவதுமாதிரியானவொரு எண்ணத்தை இதுவரை தந்திராதபோது "அம்மாவுக்கு வைத்தேன் வேட்டு" என்று மனம் கத்திக் கொண்டாலும்"மகனே நானுனைக் காவி,நாலுகட்டை தொலைவிலுள்ள வைத்திய சாலைக்கு நாயாய் அலைந்தவள்"என்றொரு குறிப்பை அம்மா எழுதாதவரை அவள் மேன்மையானவொரு ஜீவன் என்பதை எந்தத் தரங்கெட்ட அத்தான்களும் அக்காவின்ர கத கதப்புக்காக "அம்மாக்களை அற்ரேக் பண்ணவதும்" அதையே நேரம் பார்த்து வீரம் பேசுவதுமாக கோவணம் கட்டி நின்றாலும்... நான் கண்ட கதைதாம்!

ஏழு பிள்ளைகள் நல்லதங்காள் கதையில எங்களைக் கட்டிப்போட்டவொரு அம்மா, இப்போதெல்லாம் எந்தக் குறிப்புகளையும் அம்மா என் மனதில் விட்டுவிடுவதில்லை.

"இந்தியாவை அடிச்சுத்தான் இலங்கையைப் பிடிக்க முடியுமென்று"கிராமத்தில் அடிக்கடி "பெரிசுகள்" பேசிக்கொள்வார்கள்.அப்போததெல்லாம் நான் "குஞ்சாமணி பிடித்துப் பெய்த்தெரியாத"(பெரிசுகளின் பார்வையில்)பால்குடி. முளைத்து முன்றிலையெறியாதுபோனாலும் அந்த "இந்தியாவை அடிச்சு... "என்றதின் அர்த்தத்தை இவர்கள் ஏன் கதைக்கிறர்கள் என்று,எனக்குள் ஒரே ஏக்கமிருந்தது.

எங்கட ஊரிலொரு பெரும் பணக்காரியை ஸ்ரீமா என்றொரு "சுட்டல்" பெயரோடு ஊரார் மரியாதை வைத்தழைப்பதுண்டு.அவாவும் ஸ்ரீமா மாதிரியே நல்ல தோற்றமும்,பொன்னிறமும்கூடிய-"தன்னழகையே தான் இரசிக்கும்"சிங்காரி.அவர் கணவர் பாதியில் போய்சேரும்போது வருஷம்1970.அப்போதைய சொத்துமதிப்பு இரண்டு கோடியைத் தொட்டதென்பது என் அத்தாரின் வாயிலிருந்து நான்கேட்டுத் தெரிந்தவுண்மை.கொழும்பில் வியாபார நிறுவனக் கட்டடம் சொந்தமாகவும் அவர்களுக்கிருந்தது.லொறியும்,முப்பத்தியாறு ஸ்ரீயும்கொண்ட இலக்கத்தில் புத்தம் புதிய ரக்ரறும் அவர்களின் பெயரில் ஓடியது."நான் சுண்டுவிரலை அசைச்சால் இப்பவும் பையன்கள் என்ர பின்னால தவழுவான்கள்"என்பார் ஸ்ரீமா.அந்தளவுக்கு அவர் அழகாக இருந்தபோதுதாம் ஸ்ரீமாவின் மோளை லொறிரைவர் ஒரு அதிகாலையில் லொறியோடு கூட்டிக் கொண்டோடியதாகத் தகவல்.அப்போதிருந்து இந்த"இந்தியாவை அடிச்சு இலங்கையைப் பிடித்தல்"பெரும் பிரபல்யமாகப் பேசப்பட்டது.இது நடந்த வருஷம் 1974.அன்றிலிருந்து கிராமத்தில் பலமுறைகள் இந்த"இந்தியாவை அடிச்சு இலங்கையைப் பிடித்தல்கள்"நடந்தேறின.எனது வீட்டிலொரு இந்தியாவை அடித்தே இலங்கையைப் பிடித்தாகப் பலர் பறையக்கேட்டிருக்கிறேன்.அந்தநேரத்தில் எனக்கு இந்தச் சமாச்சாரத்தில் அவ்வளவு நாட்டமிருக்கவில்லை.பின்னாளில்தாம் அதுள் பொதிந்திருந்த அர்த்தம் பிடிபட்டது!அந்த நாள்முதல் நான் பல இந்தியாவைத் தேடியலைந்தபோது எனக்கு எந்த இந்தியாவும் வசப்படவில்லை.என்னவொரு பிறப்பு என்ற ஆதங்கம் தலையைக்குடைந்தபோது அப்பரின் தங்கை மகளே "பழம் நழுவிப் பாலில் விழுந்த" கதையாய் என் பக்கம் விழுந்தாள்.பாடத்துக்குக் கட்டுரை எழுதித் தரும்படி வந்தவளைப் பிழிந்தெடுக்கும் காலமொன்றில் நான் பெரியவனானபோது வருஷம் 1977.இந்தக்காலத்தில்தாம்"குடியரசு கொடிய அரசு"எண்ட சுலோகங்களை நானும் சிலரும் பாடசாலைச் சுவர்களில் தாரினால் எழுதித்திருந்தோம்.அப்போதெல்லாம் திருவாளர் க.பொ:இரத்தினம் என் ஆசான்!அவரது தமிழின் வீச்சிலும் அமிழ்ந்தபோன நான் "மதிமுக இராசாவே மதியிழந்து போகாதே"என்ற கோவையாரின் வீர வசனத்தைப் பற்றிப் பெருமிதம் கண்டு க.பொ.விடம் விளக்கம் கேட்டபோது"வாடா டேய் வந்து இந்த மட்டையைப் பிடி"என்று பனைமட்டையைக் கையிற் தந்தபோது அவரது வீட்டுவேலி ஒருநாளில் பல அடி முன்னேறியதுதாம் மிச்சம்.அதற்குப் பின்பு அவரைக்காணும்போதெல்லாம் சயிக்கள் ஐம்பது மையில் வேகத்தில் கடந்துவிடும்.

"சித்திரைக்குத் தம்பி வருஷம் வருமடி,அம்மாவுக்குப் புதுச்சீலையும் கழுத்துக்குச் சங்கிலியும்,கைக்குக் காப்பும் வேண்டித் தாடி!"என்ற அம்மாவின் கனவுக்கு நான் போட்டேன் ஆப்பு".நீ கெட்டகேட்டுக்கு இதுவொன்றும் குறைச்சலில்லை" என்றும்,ஊரில சனங்கள் படும்பாட்டில் நீ எல்லாம் எங்கே நிற்கிறாய் எண்ட போடலில் அப்பருக்கு நான் தப்பாத பிள்ளையாக இருக்கவேண்டுமென்ற கனவும்,அவரைப் பேய்க்காட்டிய உனக்கு நான் ஏன் உதவ?என்ற கோரமும் எனக்குள் ஓடித்திரிந்தது.இப்பவும் அந்தக் கோரம் போடும் கோலம் கொஞ்ச நஞ்சமில்லை!இதைத்தான் அத்தான் எதிர்பார்த்தானென்றால் இல்லையென்பதே என்பதில்.அவன் போட்ட முடிச்சு வேறானது.அதை நான் உடைப்பதில் எப்பவும் பெரியாரைத் துணைக்கழைத்து என்ர கூட்டைக் காப்பத்திப் போடுவேன்."பெரியாரின் கூற்றுப்படி எனது கூலிக்காறி காரியமாற்றினால் கதை கந்திரிதாம்"எண்ட எண்ணத்தில் மிதந்தபோது நான் "ஐந்தொகையை முடிக்கும் காலம் நெருங்கியது"இந்தவொரு காலத்தை இவ்வளவு விரைவில் நெருங்கியதில் தெம்பின்றிப்போன "ஆத்தையின்மீதான அகோர வாசிப்பு" அர்த்மற்றதாய் மனதில் பிராண்டியபோது, நான் ஏதோவொரு வைத்தியரின் முன் நிணநீர் முடிச்சின் வீக்கத்தில் மூட்டுகளின் வலியையும்,கால்களால் நடக்க முடியாததையும் விளக்கியபடி மௌனமானேன்.

அகதிக் காண்டம் நிறைந்தேக...

"அண்ணே அந்த ஊதுபத்தியைத் தலைமாட்டில் கொளுத்தி வையுங்கோ,இராஜன் அண்ணர் நாட்டுக்காகப் போராடினவர் இப்படி அநாதையாகக் கிடக்கிறாரே!ஐயருமில்லை,இவங்கட சுவாமிமாருமில்லை.இறுதியில் அகதிகளின் பிரேதங்களுக்கு எந்தக் கிரியையுமில்லை.அட ஆரப்பா,தேவாரத்தையாவது பாடித் துலையுங்கோவன்." மரண இறுதி நிகழ்வில் என்னோடு அடிக்கடி ஊஞ்சலாடிய அருமையென்ற அம்மான் கத்திக் கொண்டிருந்தான்.எப்பவெல்லாம் பேசக்கூடாதோ அப்போதெல்லாம் இவன் மட்டுமே பேசுவான்.இப்படி இவன் பேசுவதால்தாம் சில கனத்த நிகழ்வுகள் தடையின்றித் தாமதமின்றி நடக்கிறதென்பதம் உண்மை.

எனக்குள் ஓடித்திரிந்த ஒரு பூச்சி ஓய்வெடுப்பதற்குத் தயாரானபோது நான் கடைந்தேறும் காலத்தை நெருங்காதிருப்பதை எனது பொன்னான மனத்தின் கிளர்ச்சியில் ஊகித்தறிவது பெரும் பிரச்சனையாக இருந்ததில்லை!ஒன்று சண்டையில் செத்திருக்கவேணும்.அது கைகூடாது போனதால் நான்"........."யில் சாவதற்குத் தயாரானபோது நடுத்தெருவில்"அரைகுறை பெய்தெறிந்த ஆடையில் பிஞ்சு உடல்களைப்பார்த்து" நாவைத் தொங்கப்போட்டு ஊற்றிய வீணியோடு கரையொதுங்கிய தாய்லாந்துக்காரிக்கு"கண்ணே கலைமானே"என்ற ஜேசுராசாவின் குரல் பிடித்திருந்தது.அந்தப் பாடலை எனக்காகவும் அவள் ஒலியைக் குறைத்துப் போட்டுவிட்டு உடைகளைக் களைந்தபோது, சொர்க்கம் இதுதாம் எனவெண்ணியபோது சுகத்தின் எல்லைக்கு இன்னும் தூரமதிகமென நான் எண்ணியதும், அவள் ரகுமானின் "தையைத் தையைத்..."பாடலை ஒலிக்க வைத்தபோது"இதுவெப்படிக் கிடைத்ததென"அவளைக் கொஞ்சிக்கொண்டேன்,உன் நாட்டான் ஒருவன் தந்ததென்றாள்."நீ என்ன பாடலைப் பரிசாய்த் தருவாய்?"என்றபோது நான் அடுத்த நாள் ஊஞ்சல் பாட்டில் ரகுமான்போட்ட உடற்பரிசங்களை அவளின் செவிக்கு விருந்தூட்டியபடி எனது மார்ப்புக்குள் அவளைத் திணித்தபோது நான் பட்ட பரவசம் நேற்றைய எனது பிணத்தின்(கனவுதாம்) ஒரத்தில் சத்தம்போட்ட அம்மான் அருமையின் வலுக்குரலால் அழிந்தே போனது.


ப.வி.ஸ்ரீரங்கன்
23.04.2006









ஞானி

(கதையெனப் புனைதல்...)

அன்பு வாசகர்களே!உங்களுக்கு நானொரு கதை சொல்லப் போகிறேன்.ஒரு ஊரில ஒரு ராசா இருந்தாரம்...

என்ன புண்ணாக்குக் கதை? என்ர ஆச்சியில இருந்து அம்மாவரை இந்தக் கோதாரிக்கதையைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள்... இப்ப நானும் இதையே தொடர்ந்தால்...

வேண்டாம்!கதை சொல்லுதல் வேண்டாம்,இப்படிக் கதை சொல்ல வெளிக்கிட்டால் இந்தத் தமிழர்கள் இதைக் கதையெண்டுவிட்டு தங்கட சோலியைப் பார்த்துப்போடுவினம்.பிறகு அந்த மேட்டர் அப்பிடியே வளர்ந்து தங்கட மூஞ்சியில உதைக்கிற வரையும் அவை நம்பப் போறதில்லை.

ஆகையினால் இது கதையில்லை.என்ர ஊரிலுள்ள ஒரு ராசாவின் உண்மைக் கதை.அவர் முன்னொரு காலத்தில் ஏறாவூர் செங்கலடியெல்லாம் பேர் போன ராசா.மட்டக்களப்பு மான்மியத்தின் மகத்தான கதா நாயகனே அவருதான்.இந்தக் கதையைத் தொடக்கிற போக்கில நானும் அவரைப் பற்றி அறியிறமாதிரித்தான் ஏதோ சொல்லுவமெண்டு யோசிக்கிறன்.

அது வந்து பாருங்க நம்மட சனங்களுக்கு ஒண்டிருக்க இன்னொன்றுக்க கால் வைக்காட்டிச் சரிப்பட்டுவராது.இது எனக்கும் சரியாகப் பொருந்துமெண்டு பலபேர் யோசிக்கினம்.ஆக மொத்தமாக இந்தக் கதைக்கூடாகவாவது நம்மட சனங்களைக் கண்ணைப்பொத்தியடிக்கும் ராசாவைக் காட்டுவதாக ஆச்சி அடிக்கடி சொல்லுவா.இந்த ஆச்சியின்ர புருஷன் அதுதான் என்ர அப்பு ரொம்பக் கெட்டிக்காரன்!ஆருக்கும் பொடி வைச்சுப் பேசுறதே அந்தக் கிழத்துக்கு வேலை.அப்படிப்பட்ட சீமானுக்குப் பேரானாகப் பிறந்த இந்தச் சீவனுக்கு எதுவும் கைவராதிருக்கு!அந்த வடுவைப் போக்கிற மாதிரியொரு கதை சொல்ல வெளிகிடுவமெண்டால் ஆச்சி சொன்ன ராசாக் கதைதான் மனதுக்குள்ள கிடந்து பிராண்டுது.

மட்டக்களப்புக்கு யாழ்பாணத்தில இருந்து எங்கட "அம்மா மாமா" (அன்னையின் தாய்மாமன்) வருவார்.அடிக்கடி அந்த மனுஷன் வாறபோதெல்லாம் அம்மாவின்ர மூஞ்சியல மகாவலி ஆறுபோல தெளிந்த மாதிரியும் தெளியாத மாதிரியும் சரியான "றீ ஆக்சன்" வந்து துலையும்.ஆனால் அப்பருக்குச் சந்தோசம்.அம்மா விதம் விதமாகச் சமைச்சுப் பரிமாறுவாள் தன்ர மாமனுக்கு.அடிகடி தொட்டுப் பேசுவாள்.தன்ர தாய்மாமன் எண்டு அவள் மனாதாரச் சொல்லுவாள்.அம்மாவுக்கு மட்டுமல்ல அப்பருக்கு,எங்களுக்கு எல்லாருக்கும் புது உடுப்புகள் கொண்டுவருவார் அம்மா மாமா.அவரு பெரிய முதலாளி.புடவைக்கடையள் வைச்சிருகிற மனுஷன்.

தமிழ்நாட்டுக்குப் போய் பிடவைகள் அள்ளிக் கொண்டு வருகிறவராம்.அதை ஊர்ச்சனங்கள் கள்ளக் கடத்தல் எண்டு சொல்லுகிறவை.தோணியில போய் எல்லாத்தையும் அள்ளி வருகிற எங்கட மாமாவுக்கும் இந்த ராசாக் கதை சரியான விருப்பம்.என்ர அம்மம்மா அவரையும் இருத்தி வைச்சு அவிட்டுவிடுவா.அம்மா மாமா சாரயத்தைக் குடிச்சுக் கொண்டு அம்மாவின்ர தோளில கைப்போட்டுக் கொண்டு அம்மம்மாவின் கதைகளைக் கேட்டு ரிசிப்பார்.அப்பரும் குசுனிக்குள்ள எதையோ பண்ணிக் கொண்டு இறைச்சி சமைப்பார்.அம்மா மாமனுக்கான ஸ்பெஷல் அயிட்டம் எப்பவும் காட்டுப்பண்டிதான். அதைச் சமைப்பதில் அப்பன் கெட்டிக்காரன். அம்மா சுத்த சைவம்.எதையும் சமைப்பா,ஆனால் வாயிக்குப் போகாது இந்த மச்சச்(மச்சம் என்றால் புலால் கறி) சாப்பாடுகள்.

அம்மாவின்ர குடும்பம் கோயில் அர்சகர்களாக இருக்கிற குடும்பமாம்.அதால இந்த மச்சமெல்லாம் சமைக்கிறதில்லை.ஆனால் அம்மாமன் எல்லாத்தையும் பழகிப் போட்டான்!எல்லாமெண்டால்...எல்லாம்தான். அப்பன் அடிக்கடி கோயிலுக்குப் போறபோது அம்மாவைத் தூக்கினவராம்.மட்டக்களப்பிலிருந்து கஜுக் கொட்டை கொண்டுபோய் கொடுத்துக்கொடுத்து அம்மாவை வழிபண்ணினதாகச் சொல்லுவா அம்மா.

இப்பிடியான நல்ல பொழுதுகளிலதான் நானும் இந்த ராசாக் கதையைக் கேட்டனான்.இப்பயிருக்கிற இந்தப் பொழுதில் நம்மட ராசா நிசமான ஆள்தானோ எண்ட கேள்விகள் உங்களுக்கு வரும்.அது எனக்குத் தெரியாது.நீங்களே முடிவைப் பண்ணுங்கோ.

இனிக் கதைக்குள்ள போவம்:

ஒரு ஊரில ஒரு ராசா இருந்தாரம்.அவருக்குப் பெரும் செல்வம் குவிந்து கொண்டே இருந்தது.ஊர்ச்சனங்களிடம் அவர் வரி அறவிடுவாரம்.ஏனென்று கேட்டால் ராசா கோபித்துவிடுவாராம்.பின்பு கேட்டவரின் தலை கழுமரத்தில் தொங்க விடப்பட்டு"தேசத் துரோகி-எட்டப்பன் கூட்டம்" என்ற அட்டை தொங்குமாம் பிணத்தில்!அப்படியொரு பொழுதுகளை ஊர்ச்சனம் விரும்புவதில்லை.அந்த ராசாவுக்கு அயல் நாட்டு ராசாவின் மகளோடு ஒரு இதுவாம்!அதனால அந்த ராணியின்ர கடைக்கண் பார்வைக்காக தன்ர நாட்டில ஏதாவது புதிய வித்தியாசமான அறிவுப்புகளைச் செய்வார்.அந்த அறிவுப்பு அதி புத்திசாலித்தனமாக இருக்குமாம்.உடனே அயல் நாட்டு இளவரசி தன்ர மகிழ்ச்சியை ஓலை கொடுத்துப் பகிர்வாளாம்.

இப்படியான ஒரு சூழலில் ராசாவின் இந்த அறிவுப்பு வந்தது:

"மகா சனங்களே!இந்த அடங்காத் தமிழின் ராச பரம்பரைக்கு எவராவது வந்து பொய்யுரைக்கும் பட்சத்தில்,அதையும் பொய்யென எமது மாமன்னன் நம்பும் பட்சத்தில்-உங்களுக்கு பதினாயிரம் பொற்காசுகள் அன்பளிப்பாக வழங்கப் படும்"- அழைப்பு ஊரெல்லாம் பறையடிச்சுச் சொல்லப்பட்டது.

ஊரிலிருந்த மகா பொய்யர்கள் எல்லாம் உசாராகினார்கள்.நாளும் பொழுதும் பொய்யுரைக்கும் கவிஞர்களுக்கு இது கொண்டாட்டமாக இருந்தது.அவர்கள் ராசாவை அப்பப்ப பொய்யினால் குளிப்பாட்டினும்,இவ்வளவு பெரிய தொகையை ராசா கொடுப்பதில்லை.ராசாவுக்கு இந்தப் பொய்க் கவிஞர்களை,கதாசிரியர்களை,மந்திரிகளை மடக்கிற திட்டம்.தன்னைவிடப் பொய்யுரைக்கும் இந்தக் கூட்டத்தைத் தானும் மடக்கவேண்டுமென்ற ஆதங்கமும்,தன்ர மூளையைப் பாராட்டி அயல் நாட்டு இளவரசி ஓலை அனுப்ப வேண்டுமென்ற எதிர் பார்ப்பும் ராசாவைப் படாது பாடு படுத்தியது.

அரண்மனையில் காவலர்கள் உசாரானார்கள்.அரண்மனையை முற்றுகையிட்ட பொய்யுரைப்பாளர்களை ஒவ்வொருவராக மன்னனிடம் அனுப்பி வைத்தனர் மெய்ப்பாதுகாவலர்கள்.

என்ன கவிஞரே பொய்யுடன் வந்தீரோ?மன்னன் நட்புடன் வரவேற்றான்.


அதிலென்ன மன்னா சந்தேகம்?இதுதானே நமது தொழில் புதிதாகக் கேட்பதின் அர்த்தம்...-கவிஞர் சண்டித்துரை மிதமான துணிவோடு கேள்வி தொடுத்தார்.


அர்த்தமும் பொத்தமும்!பொய்யைச் சொல்லும் புண்ணாக்கரே!!-மன்னன் கோபமானான்.

மன்னா!நீங்கள் மக்களிடம் வரி அறவிடப்போவதில்லை.-கவிஞர்.

அது சாத்தியம்,நீர் போகலாம்;-மன்னர்

மன்னா! அடுத்த பொய்யர்.

என்ன பொய்யைக் கூறும்!-மன்னர்

நீங்கள் இன்றிலிருந்து யுத்தம் செய்ய மாட்டீர்கள்.அயல் நாட்டோடு சமாதானமாப் போவீர்கள்.

அதுவும் சாத்தியமே!நீரும் போகலாம்.-மன்னருக்குத் தன்ர பொய்மீது அளவு கடந்த நம்பிக்கை வந்தது.


இன்னொரு பத்திரிக்கை ஆசிரியரும் தன்பங்குக்கு இப்படிப் பொய்யுரைத்தார்: மன்னா நீங்கள் உங்கள் பதவியைத் துறந்து,முடியிழந்து,துறவியாகி விடுவீர்கள்.இது நாளைய உங்கள் திட்டம்.


ஓ அப்படியா?இது நடக்கும்,நடக்கும்.நீங்களும் போகலாம்.மன்னன் பொற் காசுகளைத் தொட்டுப்பார்த்தான்.அதை எவருமே பெறமுடியாது என்று கற்பனையில் அங்குமிங்குமாக நடந்தான்.


இப்படியாக ஆனானப்பட்ட பொய்யர்கள் எல்லோரும் முயற்சித்துத் தோல்வியைத் தழுவினர்.

காவலாளிகளுக்குச் சீ எண்ட கதை.எல்லாப் பொய்யர்களும் மௌனமாக வீடு திரும்பிய போது,ஊரிலுள்ள ஒரு வயோதிபர்-வாழ்ந்து கெட்ட கிழம்,ஊரெல்லாம் தன்ர அனுபவத்தால் ஞானி என்றழைக்கப்படுபவர்,ஊத்தை உடுப்போடு தோளில் இரு அட்டாக்களைக் காவியபடி மன்னனின் அரண்மனையை அண்மித்தான்.

கிழத்தைக் கண்ணுற்று காவலாளிகள் தமது ஆயுதத்தை எடுத்து உசாராகினார்கள்."என்ன பெரியவரே,ஏது இவ்வளவு தூரம்?இதென்ன அண்டாக்களோடு வேறு...?காவலாளிகளிலொருவன் கேட்டுக்கொண்டே கிழவரைத் தடுத்தான்.

ஐயா ராசாமாரே ஊரெல்லாம் பஞ்சம்.மன்னரின் வரியால பிழைப்புமில்லை,சாப்பிட வழியுமில்லை... என்றிழுத்தார் கிழவர்.

அதெல்லாம் எங்களுக்குத் தெரியம்.இது என்ன புதிசா பெரியவரே?ஆனானப்பட்ட கவிஞர்களே பொற்காசுகளைப் பெறமுடியவில்லை!நீரோ மன்னனிடம் பொய் சொல்லி...அதையும் அவர் நம்பி....போ,போ! என்ற காவலாளியின் கால்களில் கிழவர் வீழ்ந்தபோது மன்னரிடம் கிழவர் அனுப்பப்பட்டார்.

யாரது பெரியவரே?என்ன இரண்டு அண்டாக்களோடு வந்துள்ளீர்?ஆச்சரியத்துடன் மன்னன் தனது மந்திரிகளைப் பார்த்துச் சிரித்தான்.

கிழவன் மிகவும் அடக்கமாக"மன்னா என் நிலைமையைப் பார்த்தீர்களா?நான் இப்படியானதற்கு யாரு காரணம் தெரியுமா?உங்களது கொள்ளுப்பாட்டன்தான் காரணம்.அவர் என்னிடம் பத்து இலட்சம் பொற்காசுகளை வேண்டினார்.வேண்டியபின் இறந்துவிட்டார்.அவரது கடனை உங்கள் பாட்டன் தருவதாகக்கூறினார்.எனினும் அவரும் தராது இறந்து போனார்.அவருக்குப்பின் உங்கள் தந்தை தருவதாக் உறுதிகூறினார்.அவரும் தராமல் யுத்தத்தில் இறந்துபோனார்.இப்போது எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் இருபது இலட்சம் பொற்காசுகளை நீங்கள் தரவேண்டும்.ஒரு அண்டாவின் கழுத்துவரை பத்து இலட்சம் போடமுடியும்,மற்றைய பத்து இலட்சம் பொற்காசுகள் வட்டியாக உங்களிடம் எதிர்பார்க்கிறேன்...எனவே இரு அண்டாக்களும் நிறைவதற்கான எனது பொற்காசுகளைத் தந்துவிடுங்கள்.உங்களிடம் போட்டிகள் வைக்குமளவுக்கு இப்போது பணம் உண்டு எனவே எனது பணத்தைத் தந்து உங்கள் நீதியை நிலைப்படுத்தவும் மன்னா".

பொய்!பொய்!!மன்னன் குரலெடுத்துப் பேசினான்.

கிழவரும்"ஆமா மன்னா,இது பொய்தான்!உங்கள் அறிவுப்புப்படி நான் வென்றுள்ளேன்.தங்கள் கைகளால் பொற்காசுகளைத் தந்துவிடவும்.உங்கள் வரிச் சுமையால் ஊருக்குள் எதுவும் விளையவில்லை.இந்தக் காசுகள் ஊருக்கு இனியுதவுமென்றார்.

ஊருக்கோ?உலக்கை...உதவாக்கரை!!யார் அங்கே?மன்னன் உறுமினான்.உடனே கிழவரின் நெத்தியில் "பொட்டு" வைக்கப்பட்டு,கழுமரத்தில் "தேசத் துரோகி"என்ற அட்டையுடன் பிணமானார் அந்த ஞானி.

அம்மம்மாவுக்கு நன்றி.

முற்றும்.

Freitag, 16. Januar 2009

குஞ்சரங்கள்.

(தொடர் புனைவு.)

(1)


"முட்டிப்பானை காய்ந்தால்
சட்டி வயிறும் காய்வதுபோன்று
முந்தி வந்தவள் அவிழ்க்கும் முலையோடு
பிந்திப் போவது இதழ் பதிக்கும்."


மார்கழி 1984. கீரைபற்று.
வானம் போர்த்திருந்த நீலம் கரைந்து கொண்டிருக்க வழி தெரிந்து பறக்கும் குருவிகள் தம் இருப்பிடம் நோக்கிச் சிறகசைத்துக் கொண்டிருந்தன.வயிறார...

பொழுது மங்கிக் கொண்டிருக்க எப்பவும்போல எல்லாமே மௌனமாயின...

காற்றும் முகில்களும் சோம்பற்பட்டுக்கிடக்க,நாயும் பூனையும் கனகத்தையும் வரதலிங்கம் மாஸ்டரையும் பார்த்துக் கொண்டிருந்தன.

நான் விடியப்பிறம் போக வேணும்.பெரியவர் நாளைக்கு வாறாரப்பா.வேன் வரும் அதில போறம்.

அதென்ன நாங்கள்?
அதுதான்.சந்திரா,பவானீ...

கணக்குச் சரிதான் பிள்ள.ஆனால் எனக்கு உன்ர...

இது எப்போதாவது தொடரும்.